Monday, August 5, 2013

River of Ananda

Thirumurai 8.19
திருவாசகம்-திருத்தசாங்கம்

1.ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று.

2. ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் - காதலவர்க்
கன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
தென்பாண்டி நாடே தெளி.

3.தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
மாதாடும் பாகத்தன் வாழ்பதிஎன் கோதாட்டிப்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்தர கோசமங்கை ஊர்.

4.செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநம் சிந்தைசேர்
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தங் காண்உடையான் ஆறு.

5.கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய் நெஞ்சத்
திருளகல வாள்வீசி இன்பமரு முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.

6.இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி ஊரும் மகிழ்ந்து.

7.கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில்பெருந்துறைக்கோன்
மாற்றாரை வெல்லும் படைபகராய் ஏற்றார்
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
கழுக்கடைகாண் கைக்கொள் படை.

8.இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பால் முழங்கும் முரசியம்பாய் அன்பாற்
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
பருமிக்க நாதப் பறை.

9.ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூறும் அன்பர்பால்
மேய பெருந்துறையான் மெய்த்தார்என் தீயவினை
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
தாளிஅறு காம்உவந்த தார்.

10.சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடிகூறாய் சாலவும்
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டுங்
கோதிலா ஏறாம் கொடி.

Download Thirumurai 8.19 http://yadi.sk/d/Ntour_IJACHCY

The Name of the King ?  King of Perunthurai
O young and pretty Parakeet !
Even as Brahma ensconced On the white Lotus and Vishnu recumbent on the sea Of milk,
utter reverently the names of our King Of Perunturai,
as `the Lord of Aaroor,
the salvific Lord,
Our God and the God of gods,
` may you chant His Ever-glorious and hallowed names,
becomingly.

King Civan's Land ?  Southern Paandya
O young and pretty Parakeet whose words are blemishless And sweet and whose hue is emeraldine !
Tell me The country which is His who is the Lord of the seven worlds And who has us as His servitors.
He rules lovingly His devotees and prevents them from returning,
once for all,
To embodied life.
Know for certain that His country Is the southern Paandya realm.

The city of the King ?   Uttharakosamangkai
O Parakeet of the grove which is rich in pollen-laden Flowers !
What is the town of Him who rules us and who Is concorporate with His Consort?
It is indeed Uttharakosamangkai which is rapturously hailed As Sivapuram by His devotees of this world.

The King's River ? River of Ananda
O ruddy-beaked and green-hued bird of opulence !
Tell me the river of His who Indwells our Chinta And who is our Sire and the Lord of Perunturai.
O lass,
the river of our Lord-Owner is Ananda which Descends down from heaven to cleanse the flaws Of Chinta and make it sublime.

The Mountain of the King ? Moksha
O pretty Parakeet whose beak is ruddy like Kinjuka Blossom !
Tell me:
what is the cloud-crested mountain Of the flawless King of Perunturai?
Lo,
learn after Due investigation,
that it is the mount which chases All murk away by its effulgence and confers,
In grace,
Moksha of ever-during bliss.

The King's Courser ? Ethereal
Why do you seek your cage?
Come this side,
O Parakeet And tell me:
what is His mount whose glory is peerless?
Whilst,
for ever,
with their honey-like Chinta,
the heavenly Damsels hail Him with melodic hymns,
in joy,
He rides the ethereal courser.

The King's Weapon ? Trident
O Parakeet whose words are sweet like the honey,
gathered From the hive nestling in the spray !
Tell me:
what is The weapon of the flawless Lord of Perunturai With which He vanquishes His foes?
Lo,
His hand wields The trident that causes the untainted hearts to melt And extirpates the three mala-s.

The King's Drum ? Naada
O Parakeet whose speech is sweet as milk !
Tell me :
What type of drum resounds before our King Of Perunturai?
Lo,
it is the loud-resounding drum Of Naada which,
in bliss and out of compassion Confounds the foe which is embodiment.

The King's Garland ?  Garland Thaali-aruku
O Parakeet articulating choice words !
The Lord Of Perunturai indwells devotees in whose hearts Love wells up.
What indeed is His garland?
He rules me and quotidian fosters me By preventing the onslaught of evil Karma.
His beloved garland is woven of thaali-aruku.

The King's Banner ? signum of His Bull
O green Parakeet whose habitat is the grove !
Tell me :
What is the splendorous flag of the King of Perunturai Which is rich in pure water?
It is that which causes Dread to the foes and rises aloft in sheer beauty.
His flag is the one dight with the flawless signum of His Bull.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.