Friday, March 30, 2018

veliyaai irulaagi

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 10. திதி

பாடல் எண் : 1
புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே  .

என்றும் உள்ளவனாய், எனது உள்ளத்தில் புகுந்து நீங்காது நிற்கின்ற சிவபெருமான், `ஒளி, இருள் - புகழ், இகழ் - உடல், உயிர்` முதலிய மறுதலைப் பொருள்களிலும் அவை அவையாய்த் தொடர்ந்து நீங்காது நிற்கின்றான்.

As Light and Darkness He pervaded,
As Fame and Blemish He pervaded,
As Body and Life He pervaded,
As my constant thought He pervaded.

udalai uyirai

பத்தாம் திருமுறை

இரண்டாம் தந்திரம் - 10. திதி

பாடல் எண் : 3
உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையாப் பெருவெளி அண்ணல்நின் றானே

சிவபெருமான் இவ்வாறு எல்லாப்பொருளிலும் நிறைந்து நிற்றல், அவன் பிறபொருள்களால் அடைக்கப்படாத பெருவெளியாய் நிற்றலினாலாம்.

As body,
life,
and world,
As sea,
cloud and cloud-laden sky,
Permeating all,
indestructible and continuous
The Lord stands in majesty
The True way that never closes.

Iraivan tharisanam

எட்டாம் திருமுறை

04 திருவாசகம்-போற்றித் திருவகவல்


என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்
சென்னியில் வைத்த சேவக போற்றி
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி

என்னையும் ஓர் அடியவனாக்கிப் பெருமையாகிய திருவடியை என் தலையில் வைத்த வீரனே! வணக்கம்.
வணங்கிய கையினரின் துன்பங்களை நீக்குவோனே! வணக்கம்.
அழிவில்லாத இன்பக்கடலே! வணக்கம்.

O Hero who made even me a worthy being by placing Your great feet on my head,
praise be !
O Remover of misery when hands adore You,
praise be !
O flawless Sea of Bliss,
praise be !

indru yenakku amuthu aanai potri

எட்டாம் திருமுறை

04 திருவாசகம்-போற்றித் திருவகவல்

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக் காரமு தானாய் போற்றி

தென்தில்லையம்பலத்தில் ஆடுவோனே! வணக்கம். இன்று எனக்கு அரிய அமிர்தமாயினவனே! வணக்கம்.

O Dancer in the southern Tillai`s forum,
praise be !
For me,
this day,
You became insatiable ambrosia,
praise be !