Thursday, April 3, 2014

the acts good and bad will not remain with those who utter Lord Siva names

The temple is praised by Saints Tirunavukkarasar and Tirugnana Sambandar in their Thevaram hymns.  This is the 119th Shiva temple on the southern bank of Cauvery praised in Thevaram hymns

The east facing temple has no Rajagopuram.  The office of the temple is on the right side.  The flag post-Kodimaram and Bali Peeta are covered with metal.  Nandhi is at a higher level.  There is a three tier inner tower.  At the right side of the entrance are epigraphic details on the sthala purana.  There are also shrines for Lords Maha Vishnu, Muruga with six faces, Bhairava and Mothers Saraswathi and Gajalakshmi and Shivalingas

It is the faith of the devotees that a bath in the Sesha Theertha and worship of Lord Shiva would relieve them from sins and curses.  Those suffering from vision problems use to apply the herbal mixture offered in the temple and bathe in the Theertham.  They also consume the fig Prasad dipped in honey for cure.  Those facing skin problems consume Sesha Theertha Prasad offered on Poornima-full moon days

There are two sacred springs – Brahmma Theertham and Sesha theerthams created by Lord Brahmma and Divine Serpent Adi Sesha.  Brahmma created the spring for his Shiva worship for relief from a curse.  Adisesha passed through a well in the temple to the sanctum to worship the Lord and thus Sesha Theertham came into being.  Those suffering from vision problems bathe in the former with a herbal mixture offered in the temple and consume also the fig-honey Prasad for cure while those with skin defects consume the Sesha Theertham Prasad offered on full moon days.

Lord Vinayaka is worshipped as Pramodha Vinayaka.  The word means excited joy.  It is believed that worshipping Pramodha Vinayaka would keep the devotee ever happy.

There is also Kadukkai Vinayaka in the temple.  Kadukkai is a nut with medicinal value and is used to be powdered and put in muddy water to make it crystal clear.  This is also used as a medicine for cleaning stuffed belly.

A trader stayed in this place with bags of Jadhikai also a medicinal nut that attracted higher tax.  Vinayaka in the guise of a boy came to the trader and asked him about the contents in the bag.  To avoid higher tax, the trader said that the bags contained Kadukkai.  All the contents were found to be Kadukkai.  Realizing that the boy was Vinayaka, the trader begged his pardon.  They became Jadhikkai again.  Since that day, the boy Vinayaka came to be known as Kadukkai Vinayaka.

The temple celebrates special pujas on Tamil New Year day falling almost on April 14, abisheks to Lords Thyagaraja and Nataraja, pradosham days-13th day of new or full moon fortnights, Sankatahara Chaturthi-the 4th day of new moon fortnight, Jupiter worship on Thursdays,  Lord Muruga pujas in Karthikai-November-December, Kalashtami Bhairava Puja, New Moon and Full Moon days.

Dangam means the tool of the sculptor.  Vidangam means ‘without sculptor’s tool’.  That which comes naturally without the use of dangam or sculptor’s tool is called Vidangam or Swayambu.  Seven places with such Vidanga or Swayambu Lingas are called Saptha (seven) Vidanga Sthalas.  Indira won a war against the demons with the assistance of Emperor Mushukunda.  As token of his gratitude, Indira wanted to present a gift to the emperor and asked him what he expected.  Mushukunda asked for Vidanga Linga Indira had.  Indira did not want to part with that valuable asset.  He thought of making 6 such Lingas with the help of the divine sculptor Maya to present them to the emperor.  He made them ready.  Mushukunda, with his own divine power found the real Linga with its fragrance of Sengazhuneer flower.  Realizing the play of Lord, Indira gave all the seven Lingas – 1 + 6 to Mushukunda.
Mushukunda installed these seven Lingas in Seven places. These places are praised as Saptha Vidanga sthalas.  They are 1) Veedhi Vidangar in Tiruvarur; 2) Nagara Vidangar in Tirunallar; 3) Sundara Vidangar in Nagapattinam; 4) Avani Vidangar in Tirukuvalai; 5) Neela Vidangar in Tiruvaimur; 6) Bhuvani Vidangar in Vedaranyam and 7) Aadhi Vidangar in Tirukaravasal.  Lord Shiva graces his Kukkuda dance in this place. 

Mother Mahalakshmi, Indira, Sages Kabala, Patanjali and Vyakrapada had worshipped Lord in this temple.  Lord Dakshinamurthy is praised as Gnana Dakshinamurthy.  Devotees believe that Lord Swarnakarshana Bhairava will help them recover the losses they had incurred.   The place was dense with Karahil trees during the puranic period, it is said.  Hence, this was named Tirukarahil and changed later as Tirukaravasal.

Sri Kailasa Nayaki-Kannayira Nathar Temple, Tirukaravasal (Tirukarayil)-610 202, Tiruvarur district

Moolavar : Kannayira Nathar
Amman / Thayar : Kailasanayaki
Thala Virutcham : Jack tree-
Theertham : Brahmma theertham, Sesha theertham
Old year : 1000-2000 years old
Historical Name : Tirukarayil
City : Tirukaravasal
District : Tiruvarur

Thirumurai 2.015.திருக்காறாயில்

Download thirukaarayil.mp3 http://yadi.sk/d/WN-C4z4rLmBy5

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

சுவாமிபெயர் - கண்ணாயிரநாதர்.
தேவியார் - கயிலாயநாயகியம்மை.

நீரானே நீள்சடை மேலொர்நி ரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் றான்றொழும்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே யென்பவ ரூனமி லாதாரே. 2.015. 1

நீண்ட சடைமுடிமீது ஒப்பற்ற கங்கையை அணிந்தவன். வரிசையாகத் தொடுக்கப்பட்ட கொன்றை மாலையைச் சூடியவன். தாமரை மலரில் எழுந்தருளிய பிரமனால் வணங்கப்படும் புகழாளன் சீர் விளங்கும் திருக்காறாயில் எனப்படும் ஊரினன். இவ்வாறு அவனைப் போற்றிக் கூறுவார் குற்றம் இலராவர்.

மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்
விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்
பதியானே யென்பவர் பாவமிலாதாரே. 2.015. 2

பிறைமதியைச் சூடியவன். வரிகளை உடைய பாம்போடு ஊமத்தம் மலர் முதலியவற்றை அணிந்து நமக்கு ஊழை அமைப்பவன். விதிமுறைகளைப் பின்பற்றும் வேதியர்கள் வணங்கும் நிதியானவன். நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்ட திருக்காறாயில் எனப்படும் ஊரினன் என்று அவனைப் போற்றுவார் பாவம் இலராவர்.

விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்
மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாம்
கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்
எண்ணானே யென்பவ ரேதமி லாதாரே. 2.015.3

வீட்டுலகுக்கு உரியவன். தேவர்களாலும் போற்றி விரும்பப் பெறுமாறு மண்ணுலகில் வாழ்பவன். நிலவுலகில் வாழ்வோர்க்குக் கண் போன்றவன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருக்காறாயிலில் நாம் எண்ணுதற்கு ஏற்றவாறு எளிவந்திருப்பவன். இவ்வாறு அவன்புகழ் கூறுவோர் ஏதம் இலராவர்.

தாயானே தந்தையு மாகிய தன்மைகள்
ஆயானே யாயநல் லன்பர்க் கணியானே
சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்
மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே. 2.015. 4

நமக்குத் தாயும் தந்தையும் ஆகி அவ்விருவர் செய்யும் கடமைகளையும் புரிபவன். தன்மீது நல்லன்பு செலுத்துவோர்க்கு மிக அணிமையில் இருந்து அருள்பவன். அல்லாதவர்க்குச் சேய்மையில் இருப்பவன். புகழ் விளங்கும் திருக்காறாயில் என்னும் தலத்தில் மேவி இருப்பவன் என இவ்வாறு போற்றுபவர் மீது வினைகள் மேவா.

கலையானே கலைமலி செம்பொற் கயிலாய
மலையானே மலைபவர் மும்மதின் மாய்வித்த
சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்
நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே. 2.015. 5

எண்ணெண் கலைகளின் வடிவாய் விளங்குபவன். கலைகளின் பயனாய்ச் சிறந்த சிவந்த பொன்மயமான கயிலாய மலைக்கு உரியவன். தன்னோடு மலைந்த அசுரர்களின் முப்புரங்களைமாய்த்த வில்லை உடையவன். புகழ் மிகுந்த திருக்காறாயில் என்னும் தலத்தை நிலையாகக் கொண்டவன் என்று இவ்வாறு போற்றுபவர் மேல் வினைகள் நில்லா.

ஆற்றானே யாறணி செஞ்சடை யாடர
வேற்றானே யேழுல கும்மிமை யோர்களும்
போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்
நீற்றானே யென்பவர் மேல்வினை மேவாவே. 2.015. 6

‘நெறிகளின் வடிவாய் விளங்குபவன். கங்கையை அணிந்த செஞ்சடைமீது ஆடும் பாம்பு ஒன்றை ஏற்றவன். ஏழுலகில் வாழ்வோராலும் தேவர்களாலும் போற்றப்படுபவன். பொழில் விளங்கும் திருகாறாயிலில் நீறு பூசிய கோலத்தோடு விளங்குபவன். என்று இவ்வாறு கூறிப் போற்றுபவர் மேல் வினைகள் நில்லா.

சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்
காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்
ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 2.015. 7

தீவினைகள் தேய்ந்து அறுமாறு செய்து நம்மை அவனோடு சேர்ப்பவன், தேவர்களால போற்றப்படுபவன் நன்மா முனிவர்கட்கு இடர் வாராது காப்பவன். மழைநீர் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருக்காறாயிலில் நிறைந்தவன். இவ்வாறு அவனைப் போற்றுவாரை வினைகள் வெல்லா.

கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்
எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்
கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்
அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே. 2.015.8

காலனைக் காலால் கடிந்தவன். கயிலாயத்தைப் பெயர்த்த இராவணனுக்கு ஏதம் வருமாறும், முனிவர்கட்கு இடர் கெடு மாறும் செய்தவன். விளக்கமான திருக்காறாயிலில் எழுந்தருளியிருப்பவன் என இவ்வாறு போற்றுவாரை வினைகள் வெல்லா.

பிறையானே பேணிய பாடலொ டின்னிசை
மறையானே மாலொடு நான்முகன் காணாத
இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்
உறைவானே யென்பவர் மேல்வினை யோடுமே. 2.015. 9

இளம் பிறையைச் சூடியவன். தன்னை விரும்பிப் பாடப் பெறும் இன்னிசைப் பாடல் வடிவில் அமைந்த சாமகானமாகிய மறை மொழியை ஏற்றருள்பவன். திருமாலும் நான்முகனும் தேடி அறிய முடியாத இறைவன். அழகிய திருக்காறாயிலில் உறைபவன் என்று போற்றுபவர் மேல் வரும் வினைகள் ஓடும்.

செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்
குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே. 2.015. 10

உலகில் வாழும் முடைநாற்றம் வீசும் சமணரும், சீவரம் என்னும் துவர் ஊட்டிய ஆடையை அணிந்த புல்லிய புத்தர் என்ற பாவிகளு கூறும் பேச்சுக்களைக் கேட்பதால் விளையும் பயன் ஏதும் இல்லை. மணம் கமழும் திருக்காறாயில் என்னும் தலத்தைக் குடியாகக் கொண்டு அங்கு எழுந்தருளிய இறைவனை வழிபட்டு வாழ்வோர்க்குக் குற்றம் ஏதும் இல்லை.

ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்
ஆய்ந்தசீ ரானடி யேத்திய ருள்பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுண் ஞானசம் பந்தன்சொல்
வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே. 2.015.11

புகழ் பொருந்தியதும் அழகு நிறைந்ததுமான திருக்காறாயிலில் எழுந்தருளிய, ஆராய்ந்து கூறப்படும் புகழ் மொழிக்குப் பொருளான இறைவன் திருவடிகளை ஏத்தி, அவன் அருள்பெற்ற, நீர் பாய்ந்து. வளம் செய்யும் காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை இயன்ற அளவில் இசையோடு பாடி ஏத்துவார் வானுலகு ஆள்வர்.

Civaṉ who bears water on the long caṭai!
who wears a garland of koṉṟai flowers which are fixed in a row!
who has the fame of being worshipped by Ayaṉ (Piramaṉ) who is seated in a lotus flower!
those who praise Civaṉ as one who is in tirukkāṟāyil which is shining by its fame are faultless people

those who utter the names of Civaṉ such as Civaṉ who wears a crescent, datura flowers along with a cobra which has lines on its body!
who commands everything!
who is the wealth of the brahmins who worship him and who perform the duties prescribed in the vētams.
who is in the city of tirukkāṟāyil surrounded by fields full of water!
are without sins.

those who utter the names of Civaṉ such as one who is the world of bliss!
who is in the earth and who has a fame desired and praised by the celestials!
who is the eye to all the living beings that exist in this world!
who is the object of meditation in tirukkāṟāyil surrounded by fragrant gardens!
are faultless people

Civaṉ who is like the mother!
who has the nature of being the father also.
who is near at hand to good people who cherish him with love!
who is far away from those who have no love towards him.
who dwells with desire in tirukkāṟāyil shining with fame!
acts, good and bad, will not reach the people who praise him uttering the above names.

Civaṉ who is the arts and the knowledge contained in them!
one who is in the mountain Kayilai which is as precious as superior gold and where stags are found in plenty!
one who has a bow with which he caused destruction of the three forts of the enemies!
one who dwells permanently in tirukkāṟāyil shining by its fame the acts, good and bad, will not remain with those who utter the above names.

Civaṉ who bears a river!
who received on the red caṭai which is adorned by a river a cobra that dances spreading its hood!
who is praised by the inhabitants of the seven worlds and the celestials who do not wink!
who smeared himself with sacred ash and who is in tirukkāṟāyil where the gardens are prominent!
the acts good and bad will not remain with those who utter the above names.

Civaṉ who completely removed the sins to vanish!
who is praised by the celestials.
who warded off sufferings to the good and great sages who praise him!
who pervades tirukkāṟāyil surrounded by fields of black soil.
good and bad acts will not press round those who utter the above-mentioned names.

Civaṉ who kicked Kālaṉ (the god of death) being angry with him!
who made (Irāvaṇaṉ) who lifted Kayilāyam to suffer, and destroyed the sufferings of the sages!
who joined tirukkāṟāyil whose brilliance is prominent.
acts, good and bad, will not press round those who utter these names.

Civaṉ who wore a crescent on his head!
who chanted the cāma vetam which is musical along with songs that he liked.
who has the greatness of not being seen by Māl and nāṉmukaṉ (Piramaṉ).
who dwells in tirukkāṟāyil which is shining with its beauty.
all the acts will flee from those who utter the above mentioned names.

there is no substance in the talks of the cruel people who exist in this world, the low camaṇar of bad odour and buddhists who cover their bodies with a blanket, called Civaram.
those who observe the vow of residing in tirukkāṟāyil surrounded by beautiful gardens of fragrant flowers, will have no blemish.

praising the feet of Civaṉ whose meaningful fame has been investigated in Vētams and Ākamams and who is in Tirukkāṟāyil which has a fitting renown and shines with beauty.
those who praise according to their ability with the help of the songs of Nyāṉacampantaṉ, a native of Kāḻi of flowing water who received the grace of Civaṉ, will rule over the heaven.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.