Tuesday, April 8, 2014

Devas took the form of ants to worship Sivan

The shrine is praised in the Thevaram hymns of Saint Tirunavukkarasar.

Sun God in the Navagraha shrine is with His two consorts Usha and Pradyusha both facing each other.  Lord Kailasanatha  graces from a separate temple left of this temple.  The temple has four theerthas – Brahmma Theertham, Madhu Theertham, Kumara Theertham and Padma theertham.  It is said that the hill of this place is but a piece of the Meru mount split by Vayu – God of Wind when a competition arose between him and the divine serpent Adisesha to decide the power of their physical strength.

There is Lord Shanmugha Subramnaya’s shrine with His consorts Valli and Deivanai between the 2 Kasiviswanatha shrines behind the sanctum sanctorum.  There is the Shatkona Chakra below His Peeta. Worshipping Lord Shanmughasubramanya along with this Chakra brings immense benefits to the devotee, it is said.  Selva Vinayaka graces the devotees in the temple.

Shiva Linga in the sanctum sanctorum is in an ant-hill shape with ups and downs without a perfect shape.  It is a sand Linga, hence no abishek is performed.  Only oil application is followed.  As there is a gap in between, it appears as if there are two Lingas. It is said that the right side is of Shiva part and the left as Shakti part, hence praised as ‘Shivasakthi Linga’.  As ants (Erumbu in Tamil) are consuming the nivedhana objects in the sanctum, it is believed that Lord Shiva Himself is acknowledging the nivedhana offers during the Pujas.  This darshan is considered very important by the devotees.  It is also believed that Rathi, wife of Manmatha-Cupid worshipped the Lord praying that her alluring beauty should not make her proud.

Swarnakala Bhairava shrine is in the prakara-corridor with a furious look.  Mother Gajalakshmi is opposite to Bhairava in a separate shrine.  Worshipping both simultaneously relieves the devotee from fears and ensures prosperity in family.  Mother Narunkuzhal Nayaki – Mother with a fragrant hair – graces from a shrine facing south.  Different Alankaras are followed for the mother each day.  Just before Mother Narunkuzhal Nayaki there is an idol of a Mother worshipped in olden days.  Of the two dwarapalakas in the Lord’s shrine, one looks angry, the other smiling.  People generally known for their temperate qualities, become softer after worshipping the Lord, it is believed. The one special feature in the temple is Lord Sankara Narayana combining the greatness of both Lord Shiva and Lord Vishnu and Lord Nataraja with anklets behind the presiding Lord Shiva goshta wall.

Devas, an elite community in the celestial world lost all their wealth and position to demon Tharakasura. They approached Lord Brahmma for remedy.  He advised them to worship Lord Shiva in this place with flowers and assured them that the demon would be killed by Him.  To escape the attention of the demon, Devas took the form of ants (Erumbu in Tamil) to worship Shiva.  As the Linga was too soft and slippery and steep, they could not reach the top of the Linga.  All merciful Lord, changed His form as an ant-hill also leaning slightly to facilitate their pujas to Him.  Lord came to their rescue, destroyed the demon.  He is praised as Erumbeeswarar.

Lord Shiva in the temple is a swyambumurthy.  There is gap in the middle of the Linga as if it is twin Linga. This is explained as Shiva-Shakti form.  As ants go in line in the sanctum sanctorum during pujas, it is said that Lord, in the form of ants,accepted the pujas offered to Him.


Sri Erumbeeswarar Temple, Tiruverumbur, Trichy – 620 013.

Moolavar : Erumbeeswarar
Urchavar : Somaskandar
Amman : Narunkuzhal Nayaki
Thala Virutcham : Vilwa
Theertham : Brahmma theertham
Agamam : Kameekam
Old year : 1000-2000 years old
Historical Name : Erumbiyur
City : Tiruverumbur
District : Tiruchchirappalli

Download Panniya Thamizhu Ariyane Thiru pathigam.mp3 http://yadi.sk/d/yfvooDE7M67wd

6.091.திருவெறும்பியூர்
திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் திறத்தறியாப் பொறியி லேனைத்
தன்திறமும் அறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்எறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.091.1

தொல்லாசிரியர் ஆராய்ந்து சொல்லிய செவ்விதாகிய தமிழினது இலக்கணத்தை அறியேனும், கவிபுனைய மாட்டேனும், எண்ணாயும் திருத்தம்பெற்ற கலைகளாயும் நிற்கும் தன்னையும் தன் கூறுபாடுகளையும் அறிதற்குரிய விதியிலேனுமாகிய எனக்கு அவற்றைக் காட்டினவனும், அடைந்தேனைத் தாய் தந்தையரைப் போல அன்பாய்த் தொடர்ந்து ஆளாகக் கொண்டவனும், அழகிய எறும்பியூர் மலைமேல் மன்னும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப்பெற்றேன்.

பளிங்கின்நிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
அருமருந்தை ஆமா றறிந்தென் உள்ளந்
தௌந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.091.2

படிகமணியின் ஒளியுள்பதித்து விளங்கிய மாணிக்க ஒளியினனும், பசுபதியும், பாசுபத வேடத்தவனும், அறை கூவிப் போருக்கு எழுந்த சலந்தரனை அழித்தவனும், வேதியனும், விண்ணவனும், பொருந்தி வையத்தை அளந்த திருமாலும், நான்முகனும் ஆனவனும், துன்பந்துடைக்கும் ஆரமுது ஆனவனும் அவனே ஆமாறு அறிந்தமையால் என் உள்ளம் தௌந்து எறும்பியூர் மலைமேல் மன்னும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகும் சிவபெருமானை நான் சென்று அடையப்பெற்றேன்.

கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்
கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமரர் ஏத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி
யுலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழல்மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.091.3

கருத்திற்குக் கருவானவனும், மனத்தில் நிலைத்த கருத்தானவனும் ஞானப்பெருஞ்சுடர் ஆனவனும், அமரர்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்து தோத்திரிக்கும் அழகிய வடிவினனும், உலகத்திற்கு ஒப்பற்ற வித்தானவனும், அலையையுடைய கடலாகிய எல்லையையுடைய உலகில் நிறைந்தவனும், முதல், இடை, இறுதியாகிய தொழில்களை இயற்றுபவனும், மலரின் மணத்தை வென்ற குழலினை உடைய உமையம்மையை உடம்பில் பாகமாக வைத்தவனும், மயானத்து ஆடும் மாசிலாமணியும் திரு எறும்பியூர் மலைமேல் வாசம் செய்யும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன்.

பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்
புண்ணியனைப் புவனியது முழுதும் போத
உமிழும்அம் பொற்குன்றத்தை முத்தின் தூணை
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்தும்
திகழெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.091.4

அம்புகளைத் தூவி ஆற்றல் மிக்க அரக்கர் களுடைய மூன்று புரங்களையும் பாழ்படுத்த பரஞ்சுடரும், தன்னை விரும்பிப் புகழும் அன்பர்க்கு இன்பத்தை மகிழ்ந்தளிக்கும் அமுதமும், தேனும், புண்ணியனும், புவனிமுழுதும் வெளிப்பட ஒளி உமிழும் அழகிய பொற் குன்றமும், முத்தின் தூணும் உமையவளின் தலைவ னும், எறும்பியூர் மலைமேல் திகழ்வதும் இமையோர்கள் ஏத்துவதும் ஆகிய மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன்.

பாடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் தன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.091.5

பூதங்கள் பலவும் சேர்ந்து பலமுறையும் பாடுதற்கு இயையக் கூத்தாடுபவனும், கூரிய வாயினை உடைய சூலத்தைக் கையிற் கொண்டு எதிர்ப்படும் போரை வெல்லுதல் மிக வல்ல நிமலனும், நின்மலனும், அயன் அன்னமாய் மேலே உயர்ந்து சென்றும் மால் பூமியை அகழ்ந்து சென்றும் காணமுடியாதபடி ஒளியாக நீண்டு எங்கும் பரவினவனும், அழகிய மலர்களைக் கொண்டு முனிகணங் களால் ஏத்தப்பட்டுப் புகழ்மிக்க எறும்பியூர் மலைமேல் நிற்கும் மாணிக்கமும் செஞ்சுடருமாகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன்.

கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முன்னீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றியூ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரன்மந் திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.091.6

கரிய மேகமாய் நீரைப் பொழிபவனும், முன்பு முகிலாய்ப் பொழிந்த நீரைப் பின்பு கதிரவனாய் நின்று சுவற்றுபவனும், விரைந்த நடையுடைய விடை ஒன்றை ஊர்ந்து ஊர்பலவும் திரிபவனும், தனக்கு உரிய ஊரை ஒற்றியாகவே வைத்துக்கொண்டு உலகம் முழுதும் ஆள்பவனும், ஓங்காரமாகிய ஒரெழுத்தையே பெயராக உடையவனும், நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோரால் மந்திரம் கூறித் துதிக்கப்பட்டுப் புகழ் மிக்க எறும்பியூர் மலைமேல் நிற்கும் மாணிக்கமும் செழுஞ்சுசுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப்பெற்றேன்.

மாண்டா ரெலும்பணிந்த வாழ்க்கை யானை
மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு
பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்
போகாதென் னுள்புகுந் திடங்கொண் டென்னை
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை
அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்
கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6.091.7

இறந்தவர்களுடைய எலும்புகளை அணியும் இயல்பினனாய், கடவூர் மயானம் முதலிய இடங்களில் கூத்தாடுபவனாய், ஒளி பொருந்திய பாம்போடு எலும்பை அணிபவனாய், சுடுகாட்டில் ஆடுபவனாய், என் உள்ளத்தில் இடம் பெற்று, அதனை விடுத்துநீங்காது, என்னை அடிமை கொண்டானாய், தன் உள்ளத் திருப்பதனைப் பிறர்அறிய இயலாதவனாய், அச்சம் இல்லாதவனாய்த் தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே.

அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
யாரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா ஈசன்
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.091.8

அறத்தைத் தெரியாதவரும், ஊத்தை வாயினரும், அறிவில்லாத சிந்தையினரும் ஆரம்பவாதத்தை உடையவரும் ஆகிய சமணக் குண்டரோடும் கூடி, அரன் திருவடிகளை மறந்து, பழக்கத்தால் என்னை அறியாது அவற்றை நினைத்தலையும் ஒருநாளும் செய்யாது அறிவற்றேன். வாழ்வெல்லாம் பயனில்லாத வாழ்வாய் ஒழியவும், மண்மேற்பிறந்த நாளெல்லாம் நாளல்லவாய் வாளா ஒழியவும் இறுதியிற் சிலகாலம் ஈசன் பேர் பிதற்றிச் சிறப்புமிக்க அடிமைக் கூற்றில் அன்பு செறிந்து எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும், செழுஞ் சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடையப் பெற்றேன்.

அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.091.9

அறிவால் விளங்குகின்ற மனத்தானும், அறி வார்க்கு அல்லாமல் அறிவில்லாதாரது ஆற்றலால் சிறிதும் அறியப் படாதவனும், புள்ளிகள் விளங்கும் கொடிய பாம்பினைக் கொண்டு ஒப்பனை செய்து கொள்ளும் புண்ணியனும், அலைகள் மோதும் கடலில் தோன்றிய நஞ்சுண்ட அடையாளம் திகழும் மிடற்றவனும், இதழ்களும் தேனும் உடைய கொன்றைப் பூக்களைக் கொண்டு திகழும் சடையானும், மடைகள் தோறும் மென்மையுடைக் கமலப் பூக்கள் செறிந்து விளங்கும் எறும்பியூர் மலைமேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்று அடையப் பெற்றேன்.

அருந்தவத்தின் பெருவலியா லறிவ தின்றி
அடலரக்கன் தடவரையை யெடுத்தான் திண்டோள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை யேழுலகு மாக்கி னானை
யெம்மானைக் கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.
6.091.10

ஆற்றல் மிக்க அரக்கன் அரியதவத்தால் பெற்ற பெருவலியையே நினைத்துச் செருக்குக் கொண்டமையால் அறிவை இழந்து பெரிய கயிலை மலையை எடுக்க அவன் திண்ணிய தோள்கள் ஒடிந்து நசுங்கி ஆற்றல் அழிந்து பாதாளம் போன்ற பள்ளத்தில் கிடந்தானாகப்பின் முன்கை நரம்பினை எடுத்து வீணை நரம்பாகக் கொண்டு இசைத்துக் கீதம் பாட அதனைக் கேட்டு மகிழ்ந்திருந்தவனும், ஏழுலகங்களையும் படைத்தவனும், எம் தலைவனும், யானையின் தோலைப் போர்வையாகக் கொண்டவனும், அழகிய எறும்பியூர் மலை மேல் திகழும் மாணிக்கமும் செழுஞ்சுடரும் ஆகிய சிவபெருமானை நான் சென்றடைந்தேன்.

திருச்சிற்றம்பலம்

I know not the chaste Tamil works;
I am no poet;
Thought I,
the senseless,
do not know the greatness of Him Who is Thought,
Pann,
Arts and Scriptures,
yet,
He revealed To me His greatness and the way to be trodden;
I reached Him--my Mother and Father--,
in love,
and He continues To hold me as His servitor;
He is the Ruby atop the beauteous Yerumbiyoor Hill;
He is the ruddy flame;
I,
even I,
Was blessed to reach and attain Him.

He is the light inlaid in the crystal`s inner glow;
He is Pasupati;
His guise is Paasupatam;
He smote Jalandara who shouted aloud his challenge;
He is Brahmin;
He is of the empyrean;
He is the One who Measured the cosmos;
He is also the Four-faced;
He is The rare specific unto the troubles;
coming to know Of Him as He is,
I became inly clarified: He is the Ruby Atop Yerumbiyoor Hill;
He is the ruddy flame;
I,
even I,
was blessed to reach and attain Him.

He is the matrix;
He is the Thought of my manam;
He is The immense radiance of Gnosis;
He is the One before whom The celestials fall prostrate hailing Him;
He is the peerless Author of the cosmos;
He is the One that fills the universe With His presence;
He is its middle and end;
He is concorporate With the coy Damsel whose odoriferous tresses excel The flowers in fragrance;
He is the flawless Gem of the crematory;
He is the Ruby atop the Yerumbiyoor Hill;
He is the ruddy Flame;
I,
even I,
was blessed to reach and attain Him.

He is the supernal light who rained arrows and smote The three citadels of the puissant Asuras;
He is Sweetly-poised in them that hail Him in love;
He is Nectar;
He is honey;
He is the holy One;
He is the beauteous Auric hill whence issues the whole universe;
He is a pearly Pillar;
He is the Lord of Uma;
He is the Ruby atop the bright Yerumbiyoor Hill hailed by the celestials;
He is ruddy Flame;
I even I,
was blessed to reach and attain Him.

He dances in manifold ways to the singing of ghosts;
He is Nirmalan who is supremely valiant in fight,
Wielding a sharp spear;
He grew so straight that neither Ayan Nor Maal who flew up and burrowed into the earth Could eye Him;
He is the Ruby atop the glorious Yerumbiyoor Hill Hailed by the throngs of munis with beautiful blossoms;
He is the ruddy flame,
the Nimalan;
I,
even I,
Was blessed to reach and attain Him.

He pours as dark cloud;
He causes such water To effervesce;
He roams in many towns mounted On His Bull of swift gait;
He owns Otriyoor as His town And rules (the whole universe);
He owns the one great letter (Om);
He is the Ruby atop the glorious Yerumbiyoor Hill Hailed by Brahma,
Vishnu and Indra with mantras;
He is the ruddy flame;
I,
even I,
Was blessed to reach and attain Him.

He is the Ruby atop the lofty Yerumbiyoor Hill who is Hailed by the knowledgeable,
as bright moon,
beauteous fire,
Water,
twofold wind that pursues its course,
space,
Ethereal stars,
earth,
sky and life that is sempiternal;
He is The One abiding in my life,
the touchstone of ruddy gold,
The great,
blue hill and the heap of lovely pearls: He is the ruddy flame;
I,
even I,
Was blessed to reach and attain Him.

I wasted my days in sheer ignorance,
companied With the cruel,
brainless once of filthy mouths Who practised Aaramba Vaadaa,
all unaware of dharma;
I,
the brainless,
would not,
even unconsciously,
think Of the sacred feet: thus,
even thus,
I wasted all my life;
My days of existence were worthless days;
Yet I began to magnify the name Of the Lord and got steeped in the loving servitorship Of Him -- the ruddy flame,
the Ruby atop Yerumbiyoor Hill;
I,
even I,
was blessed to reach and attain Him.

His manam is all wisdom;
He is unbeknown to them That know not;
the knowledgeable ones know Him;
He is the holy One decked with a speckled snake;
His neck Bears the mark of His having eaten the venom of sea,
Full of breakers;
His matted hair is adorned with flowers Of konrai from the petals of which honey flows;
He is The Ruby atop the Hill of Yerumbiyoor whose ponds are Thick with soft lotus flowers;
He is the ruddy flame;
I,
even I,
was blessed to reach and attain Him.

He is endowed with the great puissance of rare tapas;
But he,
the martial Raakshasa brainlessly uprooted The immense mountain;
He so pressed him that his strong Shoulders were crushed and smashed;
he sank To the nether world;
he then plucked out the nerves of his Forearm,
strummed them and hymned Him;
to this He lent His ears;
He is the Author of the seven worlds;
He is my God;
He is mantled in the tusker`s hide;
He is the Ruby atop Yerumbiyoor Hill;
He is ruddy flame;
I,
even I,
was blessed to reach and attain Him.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.