சுவாமிபெயர் - வெள்ளிடையப்பர்.
தேவியார் - காவியங்கண்ணியம்மை.
இத்தனை யாமாற்றை
யறிந்திலேன் எம்பெருமான்
பித்தனே யென்றுன்னைப்
பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை
மாணிக்க முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
7.029.1
எங்கள் பெருமானே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, உனது திருவருட் செயல் இத்துணையதாயின காரணத்தை யான் அறிந்திலேன்; உன் இயல்பினை அறியாதவரெல்லாம் உன்னை, 'பித்தன்' என்று இகழ்ந்து பேசுவர்; அஃது அவ்வாறாக, நீ, முத்தையும் மாணிக்கத்தையும், பிற மணிகளையும் தோற்றுவித்த வித்தாய் வெளிப்பட்டவன் அன்றோ!
ஆவியைப் போகாமே
தவிர்த்தென்னை யாட்கொண்டாய
வாவியிற் கயல்பாயக்
குளத்திடை மடைதோறுங்
காவியுங் குவளையுங்
கமலஞ்செங் கழுநீரும்
மேவிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
7.029.2
வாவிகளில் கயல்மீன்கள் துள்ள, குளத்திலும், நீர்மடைகளிலும், கருங்குவளையும், செங்குவளையும், தாமரையும், செங்கழுநீரும் ஆகிய பூக்கள் பொருந்தி நிற்கும் திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே. நீயன்றோ என்னை உயிரைப் போகாது நிறுத்தி ஆட்கொண்டருளினாய்!
பாடுவார் பசிதீர்ப்பாய்
பரவுவார் பிணிகளைவாய்
ஒடுநன் கலனாக
உண்பலிக் குழல்வானே
காடுநல் லிடமாகக்
கடுவிருள் நடமாடும்
வேடனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
7.029.3
தலை ஓடே சிறந்த உண்கலமாயிருக்க, உண்ணுகின்ற பிச்சை ஏற்றற்குத் திரிபவனே, காடே சிறந்த அரங்காய் இருக்க, செறிந்த இருளிலே நடனமாடுகின்ற கோலத்தை உடையவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நீ உன்னை இசைப்பாடலால் பாடுகின்றவரும், பிறவாற்றால் துதிக்கின்றவரும் ஆகிய அடியார்களது பசியைத் தீர்த்து, நோயைப் பற்றறுப் பாயன்றோ!
வெப்பொடு பிணியெல்லாந்
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
ஒப்புடை யொளிநீலம்
ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி யழகாய
அணிநடை மடவன்னம்
மெய்ப்படு குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
7.029.4
ஒன்றோடு ஒன்று நிகரொத்த ஒளியையுடைய நீலப் பூக்கள் சிறந்து விளங்குகின்ற, மலர்களையுடைய பொய்கைகளில், மிகவும் அழகியவாய்த் தோன்றுகின்ற, அழகிய நடையையுடைய இளமையான அன்னங்கள் நிலைபெற்று வளர்கின்ற திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே. நீயன்றோ, என்னை வெப்புநோயோடு பிற நோய்கள் எல்லாவற்றையும் நீக்கி உய்யக்கொண்டாய்!
வரும்பழி வாராமே
தவிர்த்தென்னை யாட்கொண்டாய்
சுரும்புடை மர்க்கொன்றைச்
சுண்ணவெண் ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை
அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
7.029.5
வண்டுகளை உடைய கொன்றை மலர் மாலையையும், பொடியாகிய வெள்ளிய திருநீற்றையும் உடையவனே, அரும்புகளையுடைய மலர்களைக் கொண்டுள்ள பொய்கைகளில் உள்ள ஆம்பல் மலர்களையும், பூங்காவில் உள்ள மல்லிகை மலர்களையும் மிகுதியாக உடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நீயன்றோ, எனக்கு வருதற்பாலதாய பழிவாராமல் தடுத்து, என்னை ஆட்கொண்டாய்!
பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடுவிருட் சுடரொப்பாய்
மண்ணிடை யடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
7.029.6
திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, பரவெளியின்கண் உள்ள நீ, இம் மண்ணுலகில் வாழும் அடியவர்களது மனத்தின்கண்யாதொரு துன்பமும் தோன்றாதவாறு, பண்ணின்கண் இனிமையைப் போன்றும், பழத்தின்கண் சுவையைப் போன்றும், கண்ணின்கண் மணியைப் போன்றும், மிக்க இருளின்கண் விளக்கைப் போன்றும் நிற்கின்றாயன்றோ!
போந்தனை தரியாமே
நமன்றமர் புகுந்தென்னை
நோந்தன செய்தாலும்
நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந்
தவிர்த்தென்னை யாட்கொண்ட
வேந்தனே குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
7.029.7
இறக்கும் நிலை வரும் காலத்தை நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாயர்ய்ப் போந்தவன் நீயேயன்றோ! ஆதலின், இயமனுக்கு ஏவலராய் உள்ளார் வந்து எனக்கு யான் துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னையன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்.
மலக்கில்நின் னடியார்கள்
மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய
தருமனார் தமரென்னைக்
கலக்குவான் வந்தாலுங்
கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
7.029.8
அலைவில்லாத உள்ளத்தினையுடைய உன் அடியார்களது மனத்தில் உள்ள மயக்கத்தினைப் பற்றறக்களைபவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, துன்பத்தைத் தருகின்ற வெகுளியையும், மிடுக்கினையும் உடைய இயமன் தூதுவர் என்னை அச்சுறுத்த வந்தாலும், அவர்களால் வரும் மிக்க துயரத்தையும் வாராமலே விலக்குவோன் நீயேயன்றோ!
படுவிப்பாய் உனக்கேயாட்
பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன்
தோலுடுத் துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார்க்
கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே.
7.029.9
திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நல்லோரைப் பிறரை வணங்கித் துன்புறாதவாறு உனக்கே ஆட்படச் செய்பவனும், நீ தோலை உடுத்து எலும்பை அணியினும் அவர்கட்கு நல்லாடைகளை உடுப்பத்துப் பொன்னணிகளை அணிவிப்பவனும், முடிவில் அவர்களை அழிவில்லாத உனது பொன்போலும் செவ்விய திருவடிக்கண்ணே புகுவிப்பவனும், நல்லோரல்லாதாரைக் கெடுவிப்பவனும் நீயேயன்றோ!
வளங்கனி பொழின்மல்கு
வயலணிந் தழகாய
விளங்கொளி குருகாவூர்
வெள்ளடை யுறைவானை
இளங்கிளை யாரூரன்
வனப்பகை யவளப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை
பத்தர்கட் குரையாமே.
7.029.10
வளப்பம் மிகுந்த சோலைகளையும், நிறைந்த வயல்களையும் சூழக் கொண்டு அழகிதாய் நிற்கின்ற, வீசுகின்ற ஒளியினையுடைய திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை, சிங்கடிக்குத் தங்கையாகிய, 'வனப்பகை' என்பவளுக்குத் தந்தையாம் நம்பியாரூரன், மனம் இன்புற்றுப் பாடிய இத் தமிழ்மாலை, அவன் அடியார்கட்கு அவனைத் துதித்தற்கு உதவும் புகழ்மாலையாய் நிற்கும்.
திருச்சிற்றம்பலம்
the Lord in the shrine veḷḷaṭai in Kurukāvūr!
our Lord!
I did not know before the reason for bestowing upon me so much grace.
all others will speak about you as a definitely mad man.
are you not the source from which rubies, pearls and other precious stones sprouted.
Did you not get me into your good grace, preventing my life not to become useless?
the Lord in the shrine, veḷḷatai in Kurukāvūr where Kāvi red water lily, blue nelambo, lotus and purple indian water-lily are to be found in every sluice of the tank into which the carp fish jumps from the stream of water running in a river bed.
the Lord in the shrine, veḷḷatai in Kurukāvūr!
you will remove the hunger of those who sing your praise.
you will weed out the diseases of those who praise you in other ways!
you who wander with a skull as a good bowl to get food to eat!
you who have the appropriate form for dancing in the dense darkness having the cremation ground as a good stage!
you admitted me into your grace by removing all diseases including fever!
the Lord who is in the shrine veḷḷaṭai in Kurukāvūr where young swans of indescribable beautiful gait, which live in the tank having flowers in which the bright blue nelumbo flowers which are comparable to each other.
Did you not get me admitted me into your grace preventing the blemish that could come to me, as not to approach me!
you have smeared yourself with powdered white ash and has koṉṟai flowers on which bees settle.
the Lord veḷḷaṭai in Kurukāvūr, which has abundant jasmine in the garden and white lily in the big tank which has buds and flowers.
you are like the sweetness in music தமிழ் is used in the sense of sweetness you are like the sweet taste found in fruits.
you are as precious as the apple of the eye.
you are like the light in the midst of dense darkness.
you who are in the outer-space, is the protecting Lord, veḷḷaṭai in Kurukāvūr, so that sufferings may not enter into the minds of devotees in this world.
.
.
All the help rendered by god in this shrine to cuntarar melted his heart;
so he praised god in this trrain;
all these are implied in the similes
the Lord in the shrine veḷḷaṭai in Kurukāvūr.
chief who admitted me into your grace removing even the time what I should die!
It was you who came to my help not to allow me to bear patiently my difficulties.
even if the servants of the god of death come and inflict pain on me.
I will not know anybody except you, as my help.

you will completely remove the confusion in the minds of your devotees who are unperturbed.
even if the servants of the god of death who has strength and anger which can inflict pain, come to me to make me perplexed.
It is you who will prevent me from undergoing acute sufferings.
the Lord in veḷḷaṭai in Kurukāvūr!
you will have good people admitted into your grace only, without making them suffer by worshipping many minor gods.
you who wander with the dress of a skin!
even though you dress yourself in a skin you will have them dressed in good clothing and have them adorned with gold jewels.
It is you who will have the bad people, destroyed.
you will have me permitted to enter your feet as precious as gold, which do not know destruction.
on the Lord who resides in the shrine, veḷḷaṭai in Kurukāvūr which radiates light and which is beautiful adorned by fields having abundant crops and gardens yielding rich produce.
ārūraṉ who is the father of vaṉappakai, the younger sister of ciṅkaṭi.
the garden of tamiḻ verses which came out of his warm mind.
will serve as a garland of praise to the devotees to praise the Lord

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.