Thirumurai 7.48
1. மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெற்றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
2. இட்டன் உன் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள், மறந்திட்ட நாள்,
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
3. ஓவு[ம்] நாள், உணர்வு அழியும் நாள், உயிர் போகும் நாள், உயர் பாடைமேல்
காவு[ம்] நாள் இவை என்று அலால் கருதேன், கிளர் புனல் காவிரிப்
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி, பாண்டிக் கொடுமுடி
நாவலா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
4. எல்லை இல் புகழ் எம்பிரான்; எந்தைதம் பிரான்; என் பொன், மா மணி;
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய்க்கரை,
நல்லவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
வல்லவா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
5. அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்;
அஞ்சல் என்று அடித் தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்?
பஞ்சின் மெல் அடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சு அணி கண்ட! நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
6. ஏடு வான் இளம் திங்கள் சூடினை; என் பின்! கொல் புலித் தோலின்மேல்
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம் தண் காவிரிப்
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச்
சேடனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
7. விரும்பி நின் மலர்ப் பாதமே நினைந்தேன்; வினைகளும் விண்டன;
நெருங்கி வண் பொழில் சூழ்ந்து எழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென் முலைக் கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
8. செம்பொன் நேர் சடையாய்! திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்!
வம்பு உலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து, காவிரிக் கோட்டிடைக்
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
9. "சாரணன்; தந்தை; எம்பிரான்; எந்தைதம் பிரான்; எம் பொன், மா மணீ" என்று
பேர் எணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்;
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக் கொடுமுடிக்
காரணா! உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
10. கோணிய பிறை சூடியைக், கறையூரில் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப், பிஞ்ஞகப் பித்தனைப், பிறப்பு இல்லியைப்,
பாண் உலா வரி வண்டு அறை கொன்றைத் தாரனைப், படப் பாம்பு அரை
நாணனைத் தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே.
Download Thirumurai 7.48: http://yadi.sk/d/uVKdGG4r9ae9Z
O Siva! You are the embodiment of all religious austerities. You dwell in the 'pANdik kodumudi' temple in the famous town of kaRaiyUr, that is worshipped by learned people. I realized that I have no other refuge except You and meditated on Your holy feet. That was when I was truly born. I also achieved the state of not being born again. Even if I were to forget you, my tongue will go on saying Your holy name 'namaSSivaAya'.
O Siva! You are the friend who dwells in the 'pANdik kodumudi' temple, where the Kaveri river worships Your holy feet with garlands! You are the desired one! Those days when your devotees despised me, those days when I forgot Your holy feet - I consider all those days as wasted days (/bad days). Even if I were to forget you, my tongue will go on saying Your holy name 'namaSSivaAya'.
Notes:
1) Siva is referred to as 'ittan' (based on "ishta" - desired, liked, wished, beloved,,,,). Devotees like Him. Siva likes the devotees.
2) Kaveri river waters carry many flowers that are washed ashore. Sundarar ascribes that to Kaveri worshipping Siva in "pANdik kodumudi" temple with flower garlands.
3) The phrase "ittanun" can be split as "ittan un" or "ittan ~nun" - but both mean the same.
O Siva! O Divine Light! O exponent of Vedas! You dwell in the 'pANdik kodumudi' temple, where the Kaveri river flows spreading its cool waters. Those days when I forgot You - I consider all those days as days when I had lost my senses, as days when I was dead, as days when my body was carried on a bier. Even if I were to forget you, my tongue will go on saying Your holy name 'namaSSivaAya'.
O Siva! O our Lord of infinite fame! O Lord of my father! O my Precious! Good people worship and praise You in the famous 'pANdik kodumudi' temple in the kaRaiyUr town situated on the bank of Kaveri river that carries various gemstones and pours wealth. O Omnipotent! Even if I were to forget you, my tongue will go on saying Your holy name 'namaSSivaAya'.
O Siva! O poison-adorned dark throated one! O primal Lord! You dwell in the 'pANdik kodumudi' temple in kaRaiyUr town where beautiful women with soft feet bathe in the Kaveri river. You are the protection for those who are afraid. Having realized it, I too have have come to you for the same reason. Saying "do not fear", You have given protection to your lowly servant. Yet, you have not lost anything. Even if I were to forget you, my tongue will go on saying Your holy name 'namaSSivaAya'.
O Siva! O Divine Light! O Great one! You dwell in the 'pANdik kodumudi' temple in the kaRaiyUr town situated on the bank of beautiful cool Kaveri river with roaring waters. O beautiful Lord who ties a snake over tiger skin on the waist! You are wearing a petal-like crescent moon on Your head. Do I need to say anymore (about your kindness)? Even if I were to forget you, my tongue will go on saying Your holy name 'namaSSivaAya'.
Notes:
1) Siva wearing the crescent moon: The moon married all 27 daughters of Dhaksha. However, the moon did not treat all of them equally. Hence, Dhaksha cursed moon to wane slowly into nothingness. The moon worshipped Siva and sought refuge. Siva kept the moon on His head and saved him.
2) The term "sEdan' means 'the great one' (from its Tamil root). It can also mean 'the one who remains' (from its Sanskrit root 'sEsham');
Notes:
1) Siva wearing the crescent moon: The moon married all 27 daughters of Dhaksha. However, the moon did not treat all of them equally. Hence, Dhaksha cursed moon to wane slowly into nothingness. The moon worshipped Siva and sought refuge. Siva kept the moon on His head and saved him.
2) The term "sEdan' means 'the great one' (from its Tamil root). It can also mean 'the one who remains' (from its Sanskrit root 'sEsham');
O Siva! You have golden matted locks. You bent the bow (to shoot an arrow) to burn down the roaming forts. You lovingly have fragrant haired Parvathi as one half of You. You dwell in the 'pANdik kodumudi' temple in the kaRaiyUr town situated on the bank of Kaveri river where koels on tree branches sing and beautiful peacocks dance. O desirable one! Even if I were to forget you, my tongue will go on saying Your holy name 'namaSSivaAya'.
Note:
1) The term '~namban' can mean either "the one who is desirable" or "or the one who loves". Both are appropriate and refer to God.
2) Koel - Indian cuckoo (Eudynamis honorata).
O Siva! Countless devas chant your various names saying "Our Refuge! Our Father! our Lord! Our father's Lord! Our Gold! Our Gem!" and keep on babbling your praises. You are always in their minds. O Primal one who is worshipped by Vishnu and Brahma in the 'pANdik kodumudi' temple in the town of kaRaiyUr! Even if I were to forget you, my tongue will go on saying Your holy name 'namaSSivaAya'.
Note:
The term 'sAraNan' (cAraNan) can mean either "one who moves everywhere" or "one who is the refuge". Both are appropriate for God.
Siva wears the crescent moon. He is the destroyer. He is the crazy one. He has no birth. He wears a garland of kondRai flowers (Indian Laburnum) where striped bees hum. He wears a cobra as His waist belt. Devotee 'nambi ArUran' (Sundarar) has sung this set of songs on Siva. Those who sing these songs will be free from suffering.
(Note: Siva is referred to as 'crazy' (piththan) - Humans cannot make out the reasoning behind His actions. In that sense, His actions resemble a crazy person's action. Another reason for being referred to as 'crazy' is that He showers His infinite grace. 'mANikka vAsagar' sings in 'thiruvAsagam' thus - "O Sankara! You gave Yourself to me! And, all You got in return was me! I got infinite bliss from You. What did You get from me!" - 8.22.10 - kOyil thiruppadhigam).
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.