Sunday, January 12, 2014

Siva Agama



முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு

பாடல் எண் : 1

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

சிவபெருமானுக்கு நாற்றிசை நோக்கி நான்கு முகங்களும், உச்சியில் வான்நோக்கி ஒருமுகமுமாக உள்ள ஐந்து முகங்களையும் கீழிருந்து முறையே, `சத்தியோசாதம் (மேற்கு), வாமதேவம் (வடக்கு), அகோரம் (தெற்கு), தற்புருடம் (கிழக்கு) ஈசானம் (உச்சி)` என எண்ண, ஐந்தாவதாக வருவது ஈசான முகம்.
`சிவபெருமான் மேற்சொல்லிய இருக்கு முதலிய வேதங்கள் நான்கனையும் கீழுள்ள தற்புருடம் முதலிய நான்கு முகங்களானும், ஆகமங்களை மேலே உள்ள ஈசான முகத்தாலும் அருளிச்செய்தான்` என்பவாகலின், ஆகமங்களை, ``அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டது`` என்றார்.

இனிச் சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என்னும் முகங்களால் முறையே, `கௌசிகர், காசிபர், பாரத்து வாசர், கௌதமர், அகத்தியர்` என்னும் முனிவர்கட்கு மேற்சொல்லிய ஆகமங்கள் உணர்த்தப்பட்டன என்பது,


பாடல் எண் : 2

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.

பாடல் எண் : 3

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.

பாடல் எண் : 4

பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.

`சிவபெருமான் ஆகமங்களை முதற் கண் அனந்ததேவர் வாயிலாகச் சீகண்ட உருத்திரர்க்கு உணர்த்தி, பின்பு அவர் வாயிலாகத் தேவர், முனிவர், கணங்கட்கு உணர்த் தினான்` என்பது கொள்க.
.`வேதங்களை அனந்ததேவர் வாயிலாகப் பிரமதேவர்க்கு உணர்த்தினான்` என்ப.

பரமசிவன் சீகண்ட உருத்திரராய் நிற்றல், அவரே தானாக அவருள் நிற்றல். சிவ தன்மம் - சிவபுண்ணியம். `அவை சரியையும், கிரியையும்` என்பது, ``நல்லசிவ தன்மத்தால் நல்லசிவயோகத்தால் நல்லசிவ ஞானத்தால்``

 ``பராபரம், சிவதன்மம்`` என்றவை, ஏனையிடங்களிலும் சென்று இயையும். எனவே, சிவாகமங்கள் `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நாற்பாதங்களாய் உள்ளன என்பது உணர்த்தப்பட்டதாம்.
சிவாகமங்களில்,

சிவபெருமானது இலிங்கத் திருமேனி, உமா மகேசுர மூர்த்தம் முதலிய உருவத் திருமேனி, நந்திதேவர் முதலிய பரிவார மூர்த்தங்கள் முதலியவற்றின் அமைப்புமுறைகளையும், திருக் கோயில் அமைப்பு, புட்ப விதி, பிராயச்சித்த விதி, பவித்திர விதி, செப மாலை யோகபட்டம் முதலியவற்றின் அமைப்பு, அந்தியேட்டி விதி, சிரார்த்த விதி முதலியவற்றையும் கூறும் பகுதிகள் சரியாபாதம் எனவும்,

மந்திரங்களின் உச்சாரணமுறை, குண்டமண்டல வேதிகை முதலியவற்றின் அமைப்புக்கள், சந்தியாவந்தனம், பூசை, செபம், ஓமம் முதலியவற்றின் விதிகள், சமய விசேட நிருவாண தீட்சைகள் ஆசாரியாபிடேகம் என்பவற்றின் விதிகள், ஆன்மார்த்தமும், பரார்த்தமும் ஆக அமைந்த நித்திய நைமித்திய பூசை முறைகள் விழா முறைகள் போல்வனவற்றைக் கூறும் பகுதிகள் கிரியா பாதம் எனவும்,

இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு நிலைகளின் முறைமையும், மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களின் இயல்பும், ஞானபாதத்திற் சொல்லப்படும் பொருள்களைப் பாவனையாற்காணும் முறைகளும் போல்வனவற்றைக் கூறும் பகுதிகள் யோக பாதம் எனவும்,

`பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்பு, உலகத்தின் தோற்ற ஒடுக்கங்கள், அண்டகோடிகளின் இயல்புகள், நால்வகைத் தோற்றத்து எழுவகைப் பிறப்பின் எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதத்தின் இயல்புகள், வினைவகை வினைப்பயன் வகைகள், ஞானத்தின் படிநிலைகள், அவற்றின் பயன்கள் முதலிய வற்றைக் கூறும்பகுதிகள் ஞானபாதம் எனவும்
உணர்க.

தி.2 ப.43 பா.6 - திருஞானசம்பந்தரும்

பாடல் எண் : 5

சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
உவமா மகேசர் உருத்திர தேவர்
தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே.

தடத்த நிலைகளுள் மேலானதாகிய சிவம் நாத தத்துவத்தில் நின்று, தன்னிடத்தினின்று வெளிப்பட்டு விந்து தத்து வத்தில் நிற்கும் சத்திக்கு உணர்த்த, அச்சத்தி தன்னினின்றும் தோன்றிய சதாசிவர்க்கு உணர்த்த, அவர் தம்மிடத்தினின்றுந் தோன்றிய சம்புபட்ச மகேசுரரோடு ஒத்த அணுபட்ச மகேசுரராகிய மந்திர மகேசுரர்க்கு உணர்த்த, அவர் உருத்திரதேவர்க்கும், அவர் தவத் திருமாலுக்கும், அவர் பிரமேசருக்கும் உணர்த்த இவ்வாறு சுத்தமாயையில் உள்ள தலைவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவராகப் பெற்றுப் பயனடைந்த ஆகமங்களில் சிறப்பாக ஒன்பதை எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமான் மேற்குறித்தவாறு சீகண்ட பரமசிவன்பால் பெற்றார்.

அவற்றை நந்தி பெருமானிடம் கேட்டு உலகிற்கு உணர்த்தினோர் இந் நாயனாரை உள்ளிட்ட எண்மர்` என்பதையும், `இவர் வழியாக மற்றும் பலர் அவற்றை உலகிற் பரப்பினர்` என்பதையும் முன்னே கூறினார் (தி.10 எட்டாம் தந்திரம்) இன்னும் சனற்குமார முனிவர் கேட்டுச் சத்திய ஞான தரிசனிகள் நில வுலகில் வழியாகப் பரஞ்சோதிமாமுனிவர்க்கும், அவர்வழியாக திரு வெண்ணெய்நல்லூரில் `சுவேதவனப் பெருமாள்` என்னும் பிள்ளைத் திருநாமத்துடன் எழுந்தருளியிருந்த மெய்கண்ட தேவர்க்கும் உணர்த்தற்ப்பட்டு, அவர் வழியாகப் பலவிடத்தும் ஆகமப்பொருள் விளங்கிவருதல் அம் மரபினராகிய உமாபதிதேவ நாயனார் அருளிச் செய்த சிவப்பிரகாச நூலாலும், பிறவற்றாலும் நன்கறியப்பட்டது.

பாடல் எண் : 6

பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே.

பாடல் எண் : 7

அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.

பாடல் எண் : 8

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

பாடல் எண் : 9

அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலு மாமே.

பாடல் எண் : 10

பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.


THE GREATNESS OF THE AGAMAS
Agamas From The Fifth Face Of Siva

The Lord that consorts with his blue-hued half
Has the Agamas twenty-five and three;
Bowing low, the six and sixty heard
His Fifth-Face the Agamas expound.

The 28 Agamas are: 1. Kamigam, 2. Yojanam, 3. Sivithiam, 4. Karanam, 5. Ajitham, 6. Deeptham, 7. Sukshmam, 8. Sahasram, 9. Hamsumam, 10. Suprabedam, 11. Vijayam, 12. Niswasam, 13. Swayambuvam, 14. Agneyam, 15. Vijayam, 16. Rauravam, 17. Makutam, 18. Vishalam, 19. Chandra Jnanam, 20. Mukha Bimbam, 21. Purorgeetham, 22. Lalitham, 23. Siddham, 24. Santanam, 25. Sarvoktam, 26. Parameswaram, 27. Karanam, 28. Vathulam.

Agamas lnnumerable

The Sivagamas the Lord by Grace revealed;
In number a billion-million-twenty-eight
In them the Celestials the Lord`s greatness gloried;
Him, I too shall muse and praise.

Agamas Deep in Content

The Agamas sublime, the Lord by Grace revealed,
Deep and baffling even to the gods in Heaven;
Seventy billion-millions though they be;
Like writing on the waters, eluding grasp.

Agamas Revealed

The Infinite Siva revealing the Infinite Vast,
Came down to earth, His Dharma to proclaim,
The immortals, then, Him as Nandi adored,
And He stood forth as the Agamas entire.

Agamas Transmitted

From Siva the Infinite to Sakti and Sadasiva,
To Maheswara the Joyous, to Rudra Deva to
Holy Vishnu and to Brahmisa
So in succession unto Himself from Himself,
The nine Agamas our Nandi begot.

Nine Agamas

The Agamas so received are Karanam, Kamigam,
The Veeram good, the Sindam high and Vadulam,
Vyamalam the other, and Kalottaram,
The Subram pure and Makutam to crown.

Import of Agamas

Numberless the Sivagamas composed,
The Lord by His Grace revealed;
Yet if they know not the wisdom He taught;
Like writing on water, the unnumbered fade.

Revealed Alike In Sanskrit and Tamil

When rain and summer and long drawn dews stay occuring,
And when they sustain the lakes,
Then did He in Sanskrit and Tamil at once,
Reveal the rich treasure of His compassion to our Mother Great.

Key To Mystery Of Life

Life takes its birth, stands preserved awhile,
And then its departure takes; caught
In that momentary wave of flux, Him we glimpse,
The Lord who in Tamil sweet and northern tongue
Life`s mystery revealed.

Agamic Truths in 18 Languages

In eighteen various tongues they speak
The thoughts which Pandits alone know;
The Pandits` tongues numbering ten and eight
Are but what the Primal Lord declared.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.