Monday, November 11, 2013

The god who dispenses happiness Ekambara Nathar

Lord Ekambara Nathar is praised by the four saivite saints, Thirugnana Sambandar, Thirunavukkarasar, Sundarar and Manickavasagar.  This is the first Lord Shiva temple in Thondainadu region praised in Thevaram and Thiruvasagam hymns.


Lord Shiva in the temple is a swayambumurthi. The Shiva Linga made of sand by Mother Kamakshi adores the sanctum sanctorum. The symbol of Mother embracing the Linga is still visible. Opposite the sanctum of Lord Ekambareswara are the Spatika Linga facing west and the Spatika Nandhi in the prakara. On the Ratha Sapthami day in the month of Thai (January-February) rays of Sun fall on Lord. Of the Panchabhoodha sthalas, the temple belongs to Earth-Prithvi. There is a Mango tree in the temple dating back to 3,500 years. The divine tree with its four branches representing the four Vedas yields fruits in four flavours – sweet, citric, spicy and bitter. 

Procession deity Lord Ekambareswara is in a separate shrine of glass under the Rudraksha Pandal-tent, the roof with 5008 Rudrakshas. Devotees can have the darshan of Lord Shiva in his huge form. According to pundits, this darshan grants the devotee total relief from the cycle of births and deaths. The Spatika Linga prayer blesses the devotee with a beautiful personality removing evil thoughts from the mind. Also the Sahasralinga worshipped by Lord Sri Rama to cleanse Himself from the Brahmmahati dosha and the Ashtothra (108) Lingas are also in the temple. People use to light 108 lamps in this shrine. It should be remembered that gifted Tamil poet Kachiappa Shivacharya who authored the great epic Kanda Puranam (Skaanda Maha Puranam in Sanskrit was authored by Sage Veda Vyasa) and staged it at the Kuamara Kottam Lord Muruga Temple nearby was born in Kancheepuram. Saint Tirunavukkarasar praises Kanchi as a destination of vast learning – Kalviyil Karai Illadha Kanchi Managaram.

Sri Kanchi Ekambareswarar Temple, Kancheepuram-631 501

திருக்கச்சியேகம்பம் Thirumurai 4.7

பாடல் எண் : 1

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ வங்கையினி லனலேந்தி
இரவாடும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.

பாடல் எண் : 2

தேனோக்குங் கிளிமழலை யுமைகேள்வன் செழும்பவளம்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.

பாடல் எண் : 3

கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி யைம்புலனு மகத்தடக்கி
எப்போது மினியானை யென்மனத்தே வைத்தேனே.

பாடல் எண் : 4

அண்டமா யாதியா யருமறையொ டைம்பூதப்
பிண்டமா யுலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தா மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை யென்மனத்தே வைத்தேனே.

பாடல் எண் : 5

ஆறேறு சடையானை யாயிரம்பே ரம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.

பாடல் எண் : 6

தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலால்
பூசனைப் பூசனைக ளுகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலம்நீர் தீவளியா காசமாம்
ஈசனை யெம்மானை யென்மனத்தே வைத்தேனே.

பாடல் எண் : 7

நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
வல்லானை வல்லார்கண் மனத்துறையு மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்
இல்லானை யெம்மானை யென்மனத்தே வைத்தேனே.

பாடல் எண் : 8

விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனை
தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேன் மதின்மூன்றும்
எரித்தானை யெம்மானை யென்மனத்தே வைத்தேனே.

பாடல் எண் : 9

ஆகம்பத் தரவணையா னயனறிதற் கரியானைப்
பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
மாகம்ப மறையோது மிறையானை மதிற்கச்சி
யேகம்ப மேயானை யென்மனத்தே வைத்தேனே.

பாடல் எண் : 10

அடுத்தானை யுரித்தானை யருச்சுனற்குப் பாசுபதம்
கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை யென்மனத்தே வைத்தேனே.


1. என் மனத்தே வைத்தேன்
I meditated in my mind.
கரவு ஆடும் வல் நெஞ்சர்க்கு அரியானை
Civaṉ who is difficult to be known to people who have deceit in their hard hearts.
கரவார்பால் விரவு ஆடும் பெருமானை
the god who is mixed with those who have no deceit.
[[கரவிலா மனத்தர் ஆகிக் கைதொழுவார்கட்கெல்லாம் ஆடி இன்னருள் செய்யும் எந்தை (nāvukkaracar, tirupparuppatam 3).]]
விடை ஏறும் வித்தகனை
the able god who rides on a bull.
அரவு ஆடச் சடைதாழ அங்கையினில் அனல் ஏந்தி இரவு ஆடும் பெருமானை
and the god who dances at night holding fire in the palm, the cobra to dance and the caṭai to hang low.

2. என்மனத்தே வைத்தேனே
see 1st verse.
தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் (ஐ)
the husband of Umai, who speaks lisping words like the parrot, the honey thinking of a way how to get that sweetness of those words.
செழும் பவளம் தான் நோக்கும் (1) திருமேனி தழல் உருவாம் சங்கரனை
the god who dispenses happiness and has a holy form like the fire whose redness is looked at with wonder by flawless coral.
வான் நோக்கும் வளர்மதிசேர் சடையானை
who has a caṭai on which there is waxing crescent, and which is like the red sky.
வானோர்க்கும் ஏனோர்க்கும் பெருமான்
the god of the celestials and other;

3. என் மனத்தே வைத்தேனே
see 1st verse.
கைப்போது மலர் தூவிக் காதலித்து வானோர்கள் முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
Civaṉ, the first cause, who remains to be worshipped with joined hands and bowing their heads by the celestials with love, in the morning, the noon, and the evening scattering buds and flowers from their hand;
[[PP: அருப்போடு மலர் பறித்திட்டு உண்ணா ஊரும்
(nāvukkaracar, taṉittiruttaṇṭakam (1) 5)]]
அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி
having subdued internally the five senses by scattering flowers at the fixed times of worship.
எப்போதும் இனியானை
who is sweet to me always.

4. என் மனத்தே வைத்தேனே
see 1st verse.
அண்டமாய்
being himself the universe.
ஆதியாய்
being the cause for it.
அருமறையாய்
being the rare vētams.
ஐம்பூதப் பண்டமாய்
being the bodies which are the combination of the five elements.
உலகுக்கு ஓர் பெய்பொருள் ஆம் பிஞ்ஞகனை
who adorns his head with a peacock's feather, and who is the vessel into which everything is put.
தொண்டர்தாம் மலர் தூவிச் சொல்மாலை புனைகின்ற இண்டைசேர் சடையானை
who has a caṭai on which there is a circlet of flowers and which is adorned with the garland of words by devotees.

5. என் மனத்தே வைத்தேனே
see 1st verse.
ஆறு ஏறு சடையானை
Civaṉ on whose catai the river, Kaṅkai rises.
ஆயிரம் பேர் அம்மானை
the deity who has a thousand names; எண்ணாயிரம் கோடி பேரார்போலும், ஆயிரம் பேர் உகந்தானும், பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை
nāvukkaracar, tiruvākkūr,8; puḷḷirukkuvēḷūr, (2) 8; ārūr (1) 8)
பானு ஏறு படுதலையில் பலிகொள்ளும் பரம்பரனை
the excellent being, god who receives alms in a deed skull on which kites settle.
நீறு ஏறு திருமேனி நின்மலனை
the spotless god who has a holy body on which sacred ash is thickly smeared.
நெடுந்துரவி ஏறு ஏறும் பெருமானை
and the Lord who rides on a bull with a long crest-jewel.

6. என் மனத்தே வைத்தேனே
see 1st verse.
தேசனை
Civaṉ who is lustre.
தேசங்கள் தொழநின்ற திருமாலால் பூசனை
who is worshipped by tirumāl who is in turn worshipped by the people of the world under his way.
பூசனைகள் உகப்பானை
who desire different kinds of worship by his devotees.
பூவின்கண் வாசனை
who is the fragrance in the flowers.
மலை நிலம் நீர் தீ வளி ஆகாசமாம் ஈசனை
the Lord of the universe who is the mountains, earth, the water, the fire, the air, and the sky.
ஏம்மானை
and our Lord.

7. என் மனத்தே வைத்தேனே
see 1st verse.
நல்லானை
Civaṉ who dispense all good things.
நல்லான நான் மறையொடு ஆறுஅங்கம் வல்லானை
who is well versed in the six aṅkams and four vētams which are good.
வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை
the strong youth who dwells in the minds of those who are well-versed in those works.
சொல்லானைச் சொல் ஆர்ந்த பொருளானை
who is in the form of words and the meanings of those words.
துகள் ஏதும் இல்லானை
who does not have even a single fruit.
எம்மானை
who is our Lord.

8. என் மனத்தே வைத்தேனே
see 1st verse.
நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் விரித்தானை
Civaṉ who expounded in detail in different ways, different vētams to the four sages.
பதம் புரிந்தானை
who made the words lovable.
சந்திப் பொருள் உருஆம் புண்ணியனை
who is the form of virtuous acts and the form of the meanings of euphonic combination of the final letter of a word, root or base with the initial letter of the succeeding word or suffix.
தாழ்சடைமேல் கங்கைநீர் தரித்தானை
who bore the water of the Kaṅkai on the hanging caṭai.
மதில் மூன்றும் எரித்தானை எம்மானை
our Lord who burnt all the three forts.

9. என் மனத்தே வைத்தேனே
see 1st verse.
ஆகம் பத்து அரவு அணையான் அயன் அறிதற்கு அரியானை
Civaṉ who was difficult to be known, by Māl who had ten bodies in ten incarnations and has a bed of serpent and Ayaṉ (Piramaṉ)
பெண்பாகம் ஆண்பாகம் ஆய் நின்ற பசுபதியை
who is the master of all living beings who has a male half and a female half.
மாகம்பம் மறைஓதும் இறையானை
who is the chief who chants the vētam and causes great quaking.
மதில் கச்சி ஏகம்பம் மேயானை
and who dwells in ēkampam in Kacci which has fortified walls.

10. என் மனத்தே வைத்தேனே
see 1st verse.
அடுத்த ஆனை உரித்தானை
civan who flayed an elephant which approached to kill him.
அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானை
who granted the weapon of pācupatam to aruccuṉaṉ.
குலவரையே சிலையாகப் புரம் எரியக்கூர் அன்பு கொடுத்தானை
who fixed and discharged a sharp arrow using the lofty mountain of mēru as the bow, to burn the cities.
சுனை மல்குகயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை
and who curbed the arakkaṉ who lifted Kayilāyam which has many mountain springs.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.