ஏழாம் திருமுறை
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
பாடல் எண் : 6 பண் : இந்தளம்
அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே
சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், உமக்கு அகத்தொண்டு செய்யும் அந்தணர் ஒருவர் தம் நியமப்படி ஒருநாள் அரிசிலாற்றின் நீரைக் கொணர்ந்து உமக்கு ஆட்டுகின்றவர், பசியினால் மிகவும் உடல் மெலிவடைந்து, நீர்க் குடத்தையும் உமது முடியின் மேல் நழுவி விழவிட்டு, அப்பிழைக்காக நடுக்கமுற, நீர் அவரது கனவில் தோன்றி, ` அன்பனே, நீ அறியாதவாறு உன்னால் நிகழ்ந்த பிழையை நினைந்து வருந்தற்க `, ` உன் உடல் மெலிவிற்குக் காரணமான இவ்வற்கடம் நீங்குங்காறும், நாள்தோறும் உனக்குப் படியாக ஒரு காசும் கிடைக்கும் ` என்று அருளிச் செய்து, நாள்தோறும் ஒரு பொற்காசினை வற்கடத்திலும் தவறாது நிலைபெற்ற திருத்தொண்டினைச் செய்த அப்புகழ்த்துணையாரது கையிற் சேரும் படி செய்து, அவரை ஆட்கொண்டருளினீர்.
the brahmin who was doing services in the sanctuary.
was bathing you bringing water from the river Aricil.
when he trembled causing the water pot to fall on your head on account of excessive faintness due to hunger you felt happy by putting into the hands of Pukaḻttuṇai who was firm in his good acts, having apportioned to him and telling in his dream you will receive as daily batta a gold coin till the end of the famine This story is hinted by Campantar in the 7th verse of the decade on this shrine;
this verse gives more details about that;
the name of the priest is also mentioned.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.