Monday, December 11, 2017

oothi unarthu

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்

பாடல் எண் : 2
தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே  .

`சிவபிரானை உள்ளவாறு உணர்ந்தோர் யாவர்` என்பதனை முன்னே அறிந்து, பின்னர் அவர்பால் கற்றலையும், கேட்டலையும் செய்யுங்கள். கற்றும் கேட்டும் அறிந்த பின், சிந்தித்துத் தெளியுங்கள். ஏனெனில், கற்றுக் கேட்ட பின்னர்ச் சிந்தித்துத் தெளிந்தவரே சிவனைப் பெற்று உயர்ந்து நின்றனர்.

The Lord of all Devas,
the Supreme Being Divine,
Who is there who knows Him?
If any such be,
Chant His praise;
listen to the holy words and Him realise Who chant His praise and Him realise,
stand aloft and see.

aram porul inbam

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்


பாடல் எண் : 1
அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே .

முத்தி என்பது `அறம், பொருள், இன்பம்` என்னும் உலகியற் பொருள்களையும், வேதத்தின் கன்ம காண்டம், உபாசனா காண்டம், ஞானகாண்டம் என்னும் மெய்ந்நெறிப் பொருள்களையும் வல்லார்வாய்க் கேட்டார் பெற்ற பயனேயாம்.

Listening to Dharma and to the words of the Holy,
Listening to God`s valorous acts and the Devas` mantras many,
Listening to loud reports and the deeds peerless of the Lord,
The Lord whose body gleaming bright as gold are all to attain the Siva State.

vazhi thunai

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 23. கல்வி

பாடல் எண் : 8
வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்
கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை
ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்
வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே  .

வானுலகமும், பிற உலகங்களுமாய் நின்று எல்லா உயிர்கட்கும் எவ்விடத்தும் துணையாய் நிற்கும் பேராற்றலும், பேரருளும் உடையவனாகிய இறைவன், கல்வியால் யாவர்க்கும் நன் னெறித் துணையாயும், அமுதமாயும் நிற்கின்றவர்கட்கே விளங்கித் தோன்றிப் பெருந்துணையாய் நிற்பன். கல்வி இல்லாதவர்க்கு அவர் உள்ளம் தன்னை நீங்குதற்கே துணையாவன். (அறியாமையை மிகுவிப்பன் என்பதாம்)

In life`s journey a Support and Elixir rare is He,
An unfailing Guide – but to the ignorant of mind,
No support He – in all the seven Heavenly globes,
Sure prop is He,
the Mighty being.
Great and Kind.

irai vazhi paadu

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 23. கல்வி

பாடல் எண் : 4
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார்
எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமு மாமே  .

கல்வியைக் கற்றவர்களிலும் சிலர் (அதன் பயனாகிய இறைவழிபாட்டினைக் கொள்ளாமையால்) வாளா இறந்தொழி கின்றனர். இனிக் கற்றதன் பயனாகிய இறைவழிபாடு உடையவர் இறையின்பத்தை இப்பொழுதே அன்பினால் நுகர்கின்றனர். ஆகையால், கல்வியைக் கற்கின்ற நீவிர் இரவும் பகலும் இறைவனைத் துதியுங்கள். அவ்வாறு துதித்தால் அவனது சத்தி உள்நின்று தாங்குவ தாகிய அருள் உடம்பும் உங்கட்குக் கிடைக்கும்.

Men of Learning abandon the fettering,
worldly ways The firm of mind flourish high on coiling snake-like Kundalini Night and `day,
unremitting praise the Lord,
And so your body,
as on herbs alchemised,
with glory of youth will be.

siva nyanam kalvi

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 23. கல்வி


பாடல் எண் : 10
கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே  .

சிவபெருமான் ஊழிகள் பலவற்றிலும் கடல், மலை, ஐம்பூதங்களின் உரு முதலியவற்றிற் கலந்திருப்பினும், கல்வியாற் கனிந்துள்ளாரது நெஞ்சத்தையே தான் வாழும் இல்லமாகக் கொண்டுள்ளான்.

The seas He owns and the mountains high;
His Body shaped of the elements five;
The Lord of Immortals who,
through endless ages,
Mounts the powerful Bull,
at devotees heart to arrive.

iraivan than thunai

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 23. கல்வி

பாடல் எண் : 5
துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வருந் தூயநற் கந்தம்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே  .

உயிர்கட்குச் செல்கதிக்குத் துணையாய் வருகின்ற இறைவன், என்றும் உறுதுணையாகப் பற்றுமாறு நல்லாசிரியரால் அறிவுறுத்தப்படுகின்ற தூய நல்ல உறுதிச் சொல்லே (உபதேச மொழியே)யாய் நிற்பன். அச்சொல்லும் மலரோடு ஒட்டியே வருகின்ற மணம்போலத் தூயநல்ல கல்வியோடு ஒட்டியே வருவதாம்.

As our Guardian Angle comes the pure Light from high As our Guardian Angel,
the Pure word in beauty drest,
As our Guardian Angel comes the Pure Fragrance rich,
As our Guardian Angel comes the Pure Knowledge best.

paraman thiruvadi

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம் - 23. கல்வி

பாடல் எண் : 9
பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லாம் முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகிற் கிளரொளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே

யாதொரு செயலாயினும் அது முற்றுப் பெறுகின்ற அந்நிலைமையெல்லாம் முதற்கடவுளது திருவருள் பெற்றவழியே ஆவதாம். `எல்லாவற்றையும் முடிக்க வல்ல வன்மையை உடை யோம்` எனத் தம்மை மதித்துக்கொள்கின்ற தேவரேயாயினும், அவனது இயல்பை உணர்த்தும் நூல்களைக் கற்றவரே அவனது பேரின்பத்தை அடைந்தனர்; ஏனையோர் அடைந்திலர். அதனால், நீவிர் நல்லதொரு துணையைப் பற்றவேண்டின், சிவபெருமானையே அறிந்து பற்றுதல் வேண்டும்

If desire you must,
the Lord in desire seize,
If the Lord`s Grace you get,
all things are obtained;
Like the deep-skilled Devas of flaming Light;
The truly learned Heavenly Bliss attained.

anbu neri

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 22. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

பாடல் எண் : 3
அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி
இன்புறு கண்ணியொ டேற்க இசைந்தனன்
துன்புறு கண்ணிஐந் தாடுந் தொடக்கற்று
நண்புறு சிந்தையை நாடுமின் நீரே .

அன்பு பொருந்திய உள்ளத்தில் பல்வகை நிலைகளிலும் மேற்பட்டு விளங்குகின்ற சிவபெருமான், இன்பம் பொருந்திய அறக்கருணைக் கண்ணுடையவளாகிய சத்தியோடே அவ்வுள்ளங்களை ஏற்றுக் கொள்ளுதற்கு இசைந்து நிற்கின்றான். ஆதலால், துன்பம் பொருந்திய மறக்கருணைக் கண்ணுடையவளாகிய திரோதான சத்தி ஐம்புலன்களின் வழி நின்று ஆடுகின்ற ஆட்டமாகிய கட்டினின்றும் விடுபட்டு, அன்பு பொருந்திய மனத்தைப் பெறும் வழியை நீங்கள் நாடுங்கள்.

If we have love there will be spiritual glory,
and The grace of the Mother will come to us,
So give up attachment to the body-mind complex,
And seek the Lord ardently.