Thirumurai 4.10
திருக்கெடிலவாணர்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
முளைக்கதி ரிளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மறிக் கையர் செய்யபொன்
கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே. 4.010.1
மண்ணைத் தோண்டிய அளவிலே சிவந்த பொன் வெளிப்படும் கெடில நதிக்கரையில் உகந்தருளியிருக்கும் பெருமான் கிரணங்களை உடைய பிறை முழுகுமாறு கங்கை வெள்ளத்தைத் தேக்கிய நிமிர்ந்த சடையினராய், இனிய வீணையை ஒலிப்பவராய், மான்குட்டி மகிழ்ந்திருக்கும் கையினை உடையவராய், அடியவர் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார்.
ஏறின ரேறினை யேழை தன்னொரு
கூறினர் கூறினர் வேத மங்கமும்
ஆறின ராறிடு சடையர் பக்கமும்
கீறின வுடையினர் கெடில வாணரே. 4.010.2
கெடிலவாணர் காளைவாகனம் உடையவர். பார்வதி பாகர். நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் அடியார்களுக்கு உபதேசித்தவர். கங்கை தங்கும் சடையினர். பக்கத்திலும் கிழிந்த உடையைக் கொண்டவர்.
விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ
றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப்
படர்ந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்
கிடந்தழ கெழுதிய கெடில வாணரே. 4.010.3
முழுவதும் பிறையின் வெள்ளிய ஒளி பரவி, அழகாக நிமிர்ந்த சடையில் பாய்ந்த கங்கைப் புனல் தங்கி அழகுறுத்தும் கெடிலவாணர், விடக்கறை தங்கி விளங்கும் நீலகண்டர். வெண்ணீற்றை உடம்பில் அழகாக அணிந்தவர்.
விழுமணி யயிலெயிற் றம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
செழுமணி மிடற்றினர் செய்ய வெய்யதோர்
கெழுமணி யரவினர் கெடில வாணரே. 4.010.4
கெடிலவாணர் விரும்பத்தக்க சிறந்த இரத்தினங்களை உடைய மேருமலையை, நாகரத்தினங்களையுடைய பாம்பினை நாணாக இணைத்துக் கூரிய பற்களை உடைய அம்புகளைச் செலுத்துவதற்காக வளைத்தார். அவர் நீலகண்டர். நிறத்தால் சிவந்த இரத்தினத்தை உடைய கொடிய நாகபாம்பை அணிகலனாக உடையவர்.
குழுவினர் தொழுதெழு மடியர் மேல்வினை
தழுவின கழுவுவர் பவள மேனியர்
மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்
கெழுவின யோகினர் கெடில வாணரே. 4.010.5
கெடில வாணர் கூட்டமாய்த் தம்பக்கல் வந்து தம்மைத் தொழுது எழும் அடியவர்களுக்கு மேல்வரக்கடவ வினைகளைப் போக்குபவர். பவளம் போன்ற செந்நிற மேனியை உடையவர். மழுவையும் மான்குட்டியையும் ஏந்திய கையினர். பார்வதி பாகராய் இருந்தே யோகத்தில் இருப்பவர்.
அங்கையி லனலெரி யேந்தி யாறெனும்
மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை
நங்கையைப் பாகமும் நயப்பர் தென்றிசைக்
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே. 4.010.6
தென் திசையின் கங்கை என்று போற்றப்படும் கெடிலநதிக் கரையின் வீரட்டத்தில் உறையும் பெருமானார் உள்ளங்கையில் நெருப்பினை ஏந்தி, கங்கை என்னும் மங்கையைச் சடையில் சேர்த்தியவர். பார்வதியைத் தம் திருமேனியின் ஒருபாகமாக விரும்புபவர்.
கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந்
திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்
வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
கிழிந்ததே னுகர்தருங் கெடில வாணரே. 4.010.7
தேன் கூடு கிழிந்ததால் வழிந்த தேனோடு கீழே இறங்கும் வண்டுகள் ஒலிக்க ஒழுகும் தேனைப் பெண் குரங்குகள் நுகரும் கெடிலவாணர் இறந்தவர்களின் மண்டை ஓட்டினை உண்கலனாக ஏந்திச் சுடுகாட்டில் தங்கிக் கீழ் நிலையில் உள்ளவர் என்று அறிவிலிகள் பரிகசிக்குமாறு வாழ்பவர்.
கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே
கிடந்துதா னகுதலைக் கெடில வாணரே. 4.010.8
பெருமான் திருமார்பில் கிடந்த பாம்பினைத் தன் அருகில் கண்டு பார்வதி மயங்க, அப்பாம்பு அவளை மயிலோ என்று ஐயப்பட, கங்கை தங்கிய சடைமேல் உள்ள பிறையும் பாம்பினைக் கண்டு மனம் வருந்த, இவற்றை எல்லாம் கண்டு சிரிக்கும் மண்டை ஓட்டினைக் கையில் கொண்டவர் கெடில வாணராவர்.
வெறியுறு விரிசடை புரள வீசியோர்
பொறியுறு புலியுரி யரைய தாகவும்
நெறியுறு குழலுமை பாக மாகவும்
கிறிபட வுழிதர்வர் கெடில வாணரே. 4.010.9
கெடில வாணர் நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை புரளுமாறு தலையை அசைத்து, புள்ளிகளை உடைய புலித்தோலை இடையில் அணிந்து, சுருண்ட கூந்தலை உடைய உமாதேவி தம்திருமேனியில் ஒருபாகமாக இருக்கத் தந்திரமாக மாயக் கூத்தாடுவர்.
பூண்டதே ரரக்கனைப் பொருவின் மால்வரைத்
தூண்டுதோ ளவைபட வடர்த்த தாளினார்
ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே. 4.010.10
பெருக்கெடுத்தோடும் நீர்நிலையில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூவின் பக்கம் எருமை பாய்தலால் தாமரை இதழ் கிழியத் தேன் வெளிப்படுகின்ற கெடிலவாணர் புட்பக விமானத்தைச் செலுத்தி வந்த இராவணனை ஒப்பற்ற மேம்பட்ட கயிலைமலையைப் பெயர்க்கமுற்பட்ட தோள்கள் நசுங்குமாறு வருந்திய திருவடியை உடையவர்.
திருச்சிற்றம்பலம்
Civaṉ who dwells on the bank of the river Keṭilam in which superior gold appears when the bed is scratched up.
has a caṭai into which the young crescent of rising rays submerges in the flood which surrounds the caṭai.
has a vīṇai of gentle sound.
holds in his hand a young disporting deer.
Civaṉ who dwells on the bank of the Keṭilam.
rides on a bull.
has on his half a lady.
revealed the four Vētams.
has six Aṅkams of the Vētams.
has a caṭai in which he has placed the river Kaṅkai.
has a dress which is torn on one side.
Civaṉ who dwells on the bank of the Keṭilam, who has on his caṭai a white, and spreading crescent whose beauty cannot be drawn to describe it and water which flows and beautifully lying there has in his neck a poison that shines brilliantly;
united with it.
paints his whole body with white sacred ash, to appear beautiful.
Civaṉ who dwells on the bank of Keṭilam.
bent a high mountain which has big gems, fixing in it a sharp arrow with teeth and superior gems which are coveted by all.
has a neck which is like the flawless sapphire.
adorns with a cobra which has a gem, which is red in colour and cruel in nature.
Civaṉ who dwells on the bank of the Kaṭilam.
will cleanse the acts which have joined the devotees who worship him in several groups.
has a holy form like coral holds a battle-axe.
has in his hand a young deer.
is a yōki who is united with a lady.
Civaṉ who dwells on the bank of the Keṭilam which is enrolled as the Kaṅkai of the south holding a burning fire in the hand.
is united with a lady who is in the form of a river, in his caṭai.
desirously gives a portion of his body to the daughter of the big mountain.
when the bees which hum like sweet music.
Civaṉ who dwells on the bank of the Keṭilam where the female monkeys drink the honey descending overflowing from the honey combs which have burst out.
holding as a vessel the skull of Piramaṉ who had died.
dwelling in the cremation ground.
exists to be despised as one who is degraded.
the lady Umai to be bewildered, seeing by her side the cobra which is lying on the body of Civaṉ.
and the cobra lying on the body to doubt her as a peacock on account of her gentleness.
the crescent too which is in the caṭai where the water is lying without movement, to be panic-stricken.
Civaṉ dwells on the bank of the Keṭilam has a skull lying, in his caṭai and laughing at these.

flinging the loosened caṭai which has excessive fragrance to roll over his shoulders.
when there is the skin of a leopard with spots in his waist.
and when Umai who has curly tresses of hair on one half.
will wander making playful mischief.
Civaṉ who dwells on the bank of the Keṭilam where the buffaloes spring on the lotus in the collected water and as a result of that act the flowers are torn and they pour down honey.
has a toe which he pressed down to crush the shoulders with which the arakkaṉ who had a well-adorned chariot, and who lifted the great mountain.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.