Tuesday, May 30, 2017

sivapuram selvan


Thirumurai 6.087 திருச்சிவபுரம்


பாடல் எண் : 1
வானவன்காண் வானவர்க்கு மேலா னான்காண்
    வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்
ஆனவன்காண் ஆனைந்தும் ஆடி னான்காண்
    ஐயன்காண் கையிலனல் ஏந்தி யாடும்
கானவன்காண் கானவனுக் கருள்செய் தான்காண்
    கருதுவார் இதயத்துக் கமலத் தூறும்
தேனவன்காண் சென்றடையாச் செல்வன் றான்காண்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

சிவபுரத்து எம் செல்வன் ஆம் சிவபெருமான், வானிடத்து உறைபவனும், தேவர்களுக்கு மேலானவனும், வட மொழியும் இனிய தமிழ் மொழியும் மறைகள் நான்கும் ஆனவனும், ஆன்ஐந்தாம் பஞ்சகவ்வியத்தில் ஆடினவனும், கானவனாகிய கண்ணப்பனுக்கு அருள் செய்தவனும், தன்னைக் கருதுவார் இதயத் திடத்து, தாமரை மலரிடத்து ஊறும் தேன் போன்றவனும், முன்பு இல்லாது, பின்பு காரணத்தாற் சென்றடையும் பெற்றியதன்றி இயல்பாகவே உள்ள செல்வனும் ஆவான்.

பாடல் எண் : 6
பாரவன்காண் பாரதனிற் பயிரா னான்காண்
    பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில் நின்ற
நீரவன்காண் நீர்சடைமேல் நிகழ்வித் தான்காண்
    நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோங்கும்
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றிப்
    பிரியாது பலநாளும் வழிபட் டேத்தும்
சீரவன்காண் சீருடைய தேவர்க் கெல்லாஞ்
    சிவனவன்காண் சிவபுரத் தெஞ்செல்வன் தானே

சிவபுரத்தெம் செல்வனாம் சிவபெருமான், விளைநிலமானவனும், விளைநிலத்தில் பயிரானவனும், பயிரை வளர்க்கும் மழையானவனும், அம்மழைத்துளியில் நின்ற நீரானவனும், தன் சடைமேல் நீர்நிற்கச் செய்தவனும், நிலவேந்தர் தம் ஆட்சியால் தாம் பெறும் பரிசாகத் தம் மனத்தில் எஞ்ஞான்றும் நினைக்குமாறு ஓங்கும் புகழானவனும், பிறை போன்ற விளைந்த பல்லினை உடைய வெள்ளைப் பன்றியாகிய திருமால் இந்நகரின் நீங்காது பலநாளும் வழிபட்டு வணங்கும் புகழினனானவனும், சிறப்புடைய தேவர் எல்லாருக்கும் இன்பக் காரணன் ஆனவனும் ஆவான்

He is of the empyrean;
He is far above the celestials;
He became Sanskirt,
Tamil of the South and the four Vedas;
He bathes in the Pancha- kavya;
He is the Lord;
He is a forester who holds fire in His palm and dances;
He graced the forester;
He is the honey that gushes From the lotus- hearts of the meditators;
He is the opulent One of infinite riches;
He is Siva;
He is the our opulent Lord of Sivapuram

He is the earth and the crops of the earth;
He is the rain That fosters the crops;
He is the water of the rain;
He sported the water on His crest;
His is the name that soars Aloft,
guerdon-like,
in the memory of the Kings of earth;
He is the glorious One that is adored and hailed For days on end by the white Boar of crescentlike tusks,
That parted not from Him;
He is Siva to all The glorious Devas;
He is our opulent Lord of Sivapuram.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.