Monday, July 22, 2013

Lord gifted gold coins to Sundarar

திருமுதுகுன்றம்




Thirumurai 7.25

1. பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் மெரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள் அடியேன்இட் டளங்கெடவே.

2. உம்பரும் வானவரும் முடனேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித் திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள் பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மான்அருளீர் அடியேன்இட் டளங்கெடவே.

3. பத்தா பத்தர்களுக் கருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முதுகுன்ற மமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண் பரவையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடியேன்இட் டளங்கெடவே.

4. மங்கையொர் கூறமர்ந்தீர் மறைநான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர் திகழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை குணங்கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய் அடியேன்இட் டளங்கெடவே.

5. மையா ரும்மிடற்றாய் மருவார்புர மூன்றெரித்த
செய்யார் மேனியனே திகழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே ரல்குலாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய் அடியேன்இட் டளங்கெடவே.

6. நெடியான் நான்முகனும் மிரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே
படியா ரும்மியலாள் பரவையிவள் தன்முகப்பே
யடிகேள் தந்தருளீர் அடியேன்இட் டளங்கெடவே.

7. கொந்தண வும்பொழில்சூழ் குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர் சடைமாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள் பரவையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய் அடியேன்இட் டளங்கெடவே.

8. பரசா ருங்கரவா பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர முதுகுன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய் அடியேன்இட் டளங்கெடவே.

9. ஏத்தா திருந்தறியேன் இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லா முதுகுன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள் பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேன்இட் டளங்கெடவே.

10. பிறையா ருஞ்சடையெம் பெருமானரு ளாயென்று
முறையால் வந்தமரர் வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில் வயல்நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க் கெளிதாஞ்சிவ லோகமதே.

Download Thirumurai 7.25 http://yadi.sk/d/3AUIhgFY9ava4

Civaṉ who has a holy body glittering like gold!
you tied a tiger`s skin in the waist you burnt all the three well-built forts long ago.
you dwelt in mutukuṉṟu.
in the presence of this lady, paravai, who has a waist as supple as the lightning.
my god what is the thing you did?
you grant your grace to remove the difficulty of your slave.

you dwelt in eminent mutukuṉṟu having bestowed on me, superior gold, when the celestials and those who dwelt above them were standing struck with wonder.
this lady, paravai, who has a fragrant tresses of hair is pining away.
our god!
grant me your grace to remove the difficulty of your slave.

God who is the support of all things.
who is the supreme being above all superior things and who bestows his grace on his devotees.
who is naturally free from all bondage.
who has three eyes.
who dwells in mutukuṉṟam!
this lady paravai who has eyes coated with collyrium not to pine away.
my father.
give back superior gold so that the difficulty of your slave may be removed

you desired one half as a lady.
you expounded in detail all the four vētams.
you adorned your caṭai with a crescent.
you dwelt in eminent mutukuṉṟu.
in the presence of paravai who possesses good qualities and a good lady with beautiful breasts.
Civaṉ who has gracious looks!
grant me the gold to remove the difficulty of your slave.

Civaṉ who has a neck in which there is poison!
who has a red body and who burnt the three cities of the enemies.
who dwelt in eminent mutukuṉṟu.
this lady who has sides like the hood of the cobra is pining away.
the master!
give me the gold to remove the difficulty of your slave.

Civaṉ who remained in mutukuṉṟam where tall Māl, Piramaṉ of four faces, the sun-god and intiraṉ bow low to touch your feet with their heads, coming to the earth.
in the presence of this lady, paravai who has a tenderness which is a model for other women.
my deity!
grant me the gold to remove the difficulty of your slave.

Civaṉ who has grant mutukuṉṟu, and who has on his caṭai the crescent which comes down and crawls on the mansions and the big and cool wales of fortification which are surrounded by gardens where there are bunches of flowers!
one who has sweet grace!
in the presence of this lady, paravai who has a ball attached to her fingers.
grant me the gold to remove the difficulty of your slave.

Civaṉ who has a battle-axe in the hand!
Civaṉ who dwelt in mutukuṉṟam for all the eighteen classes of celestial hosts to go from left to right when the drum, muracu is making a reverberating sound!
the King of all the worlds!
in the presence of this lady, paravai, who has tresses which have fragrant.
grant me the gold to remove the difficulty of your slave.

unequalled chief of the celestials who do not wink!
who is senior to all the worlds!
who dwelt in mutukuṉṟam!
I never ceased from praising you.
who dances!
in the presence of this lady, paravai, who has tresses of hair in which flowers are blossoming and are found in plenty.
grant me the gold to remove the difficulty of your slave.

about Civaṉ in mutukuṉṟu to whom the immortals pay homage according to their status, coming to the earth.
paying Civaṉ who has a caṭai on which there is a crescent!
our Lord!
grant me the superior gold!
attaining civalokam is easy to those who can sing the verses full of Civaṉ`s grace, composed by ārūraṉ of nāvalūr which has fertile fields the illustrious person among the brahmins.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.