Muthal Tanthiram 1. Sivaparathuvam
1. சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
2. அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
3. முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன்
தன்னையப் பாஎனில் அப்பனு மாய்உளன்
பொன்னையொப் பாகின்ற போதகத் தானே.
4. தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருளறி வார்இல்லை
சேயனு மல்லன் அணியன்நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே.
5. பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
6. அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலின் முடிவும்மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே.
7. கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.
8. மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.
9.அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேனென் றச்சுதன் சொல்ல
முடிகண்டே னென்றயன் பொய்மொழிந் தானே.
10. கடந்துநின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணன்அம் மாயன்
கடந்துநின் றான்அவர்க் கப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே.
Siva Is Nonpareil
Search where ye will, there`s no God like Siva,
None here below to equal Him in glory;
Lotus-like, He, of gleaming matted locks,
Fiery in splendour, beyond the worlds, apart.
Siva Is Omni-Competent
Without Him, there be Celestials none,
Without Him, penance is not,
Without Him, naught the Three accomplish,
Without Him, I know not how to enter the City`s Gate.
Siva Is Divine Father
Primal First is He, older than the Co-eval Three
But the Lord is He peerless, unequalled;
Call Him ``Father, `` and Father He to thee
Inside you He flames in the Lotus of Golden Hue.
Siva Is Kinder Than Mother
Hotter is He than fire, cooler than water;
And yet none knows of His Grace abounding;
Far away, yet very close to the good,
Kinder than the mother is He, of the flowing matted locks.
All Worship Him
Gold- bewrought, His matted locks fall back and gleam
Nandi, His name,
My Lord is He, ever by me worshipt;
But none there be whom He worships.
Effort And Fruit
Near and far I look; but around the Being First,
No other God, I see, mightier than He;
Himself the effort, and Himself, too, effort`s end;
Himself the rains, Himself the clouds rain-laden,
The Nandi- named.
Beyond Comprehension
Humans and celestials go after gods who pass away
They do not realize that He of the fore-head eye is the Supreme,
One-pointed in His concern for His devotees.
Immeasurable
Mal who spanned the earth and Brahma the Louts-seated one,
And others of the gods fathomed Him not;
There be none to measure Him that measured the Heav`ns
Transcending He stands, bestowing everything with a glance.
Baffling Quest Of Brahma And Vishnu
Ayan and Mal, His Head and Foot toiling sought,
Baffled in their quest, again on earth they met;
``I saw not the Foot,`` Achutha plained
``The Head I saw,`` Ayan falsely claimed.
Transcends All
Transcended He Brahma on the lotus-seat,
Transcended Mayan, the ocean-hued,
Transcended He, Isan, who transcends all,
Transceded He space infinite, witnessing all.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.